Announcement

Collapse
No announcement yet.

Milk offering to Maha Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Milk offering to Maha Periyavaa

    Milk offering to Maha Periyavaa

    திருச்சியில் பெரியவாளுடைய பரம பக்தர் ஒருவர். போட்டோ எடுப்பவர். அவருக்கு விஸ்தாரமான பூஜையோ, ஸ்லோகமா எதுவும் தெரியாது. பெரியவாளை மட்டுமே தெரியும். தினமும் காலையில் பெரியவா படத்துக்கு முன் தான் சமைத்ததை வைத்துவிட்டுத்தான வேலைக்குச் செல்வார்.

    பெரியவா அப்போது கர்நூலில் முகாம். திருச்சி பக்தருக்கு திடீரென்று பெரியவாளை கர்னூல் போயாவது தர்சனம் பண்ண வேண்டும் என்ற பேராவல் பிறந்தது.

    உடனே ஏதோ ரயிலில் கிளம்பி விட்டார். போகும்முன், காய்ச்சி அப்போதுதான் இறக்கிய பாலை ஒரு டம்ப்ளரில் விட்டு, சுடச்சுட பெரியவா முன் வைத்துவிட்டு கிளம்பினார்.

    கர்நூலில் ஏகப்பட்ட கூட்டம்! இவரால் உள்ளேயே செல்ல முடியவில்லை. ஒரு மணல் மேட்டில் ஏறி நின்றுகொண்டு பெரியவாளை எட்ட இருந்தே தர்சனம் பண்ணிவிட்டு,
    சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிடலாம் என்ற எண்ணத்தோடு, கொஞ்சம் ஏமாற்றத்தோடு கிளம்பினார். கொஞ்ச தூரம் போனவரை யாரோ பின்னாலிருந்து அழைத்தார்கள். ஒரு பக்தர் பின்னால் ஓடி வந்தார்.....

    "நீங்கதானே திருச்சிலேர்ந்து வந்திருக்கேள்?....."

    "ஆமா......"

    "பெரியவா ஒங்களை அழைச்சிண்டு வரச் சொன்னா....."

    "என்னையா......?" சந்தேஹத்தோடு இழுத்தார்.

    "நீங்க போட்டோக்ராபர்தானே? ......"

    "ஆமா..."

    "அப்டீன்னா.....வாங்கோ! ஒங்களைத்தான் கூப்பிடறா பெரியவா"

    இவருக்கோ கால் பூமியில் பாவவில்லை...அவ்வளவு சந்தோஷம்!

    ஒரு இனம் புரியாத உணர்வு!

    பெரியவா முன் தன்னை மறந்து கண்களில் கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்தர். பெரியவா அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார்.

    "என்னைப் பாக்கணும்...ன்னு இவ்ளோ...தூரம் வந்திருக்கே! கடேசீல பாக்காமலேயே கெளம்பிப் போனா, என்னப்பா அர்த்தம்?..."

    ஏறக்குறைய அழுதே விட்டார் பக்தர்! என்ன வாத்சல்யம்!

    "இல்லே பெரியவா.....கும்பல் நெறைய இருந்தது...அதான் சாயங்காலம் கொஞ்சம் சீக்ரமா வந்துடலாம்..ன்னு..."

    "சரி, சரி....சாப்ட்டியோ?.."

    அவருடைய அம்மாவுக்கப்புறம், அம்மாக்களுக்கெல்ல& #3006;ம் அம்மாவான பெரியவா "சாப்பிட்டியா?"ன்னு கேட்டார்.

    "சாப்ட்டேன்...பெரியவ"

    "என்னோட வாயைப் பாத்தியோ?.." என்று கேட்டுவிட்டு, நாக்கை நீட்டிக் காட்டினார். சூடுபட்டது போல் சிவந்து புண்ணாகி இருந்தது.

    "ஒதடெல்லாம் கூட புண்ணாயிடுத்து! ஏன்னு தெரியுமோ?..."

    பக்தருக்கு எல்லாம் கனவா, நனவா என்றே புரியவில்லை. குதிகாலில் நின்று ஒரு சின்ன இடுக்கு வழியாகவாவது தர்சனம் பண்ண மாட்டோமா? என்று ஏங்குவோர் பல கோடி பேர் இருக்க, அவ்வாறு ஏங்கிய அற்பமான தன்னை, இவ்வளவு அருகாமையில்
    அழைத்து தர்சனமும் குடுத்து, யசோதைக்கு அப்புறம், தன்னுடைய வாயைத் திறந்து காட்டிய பரம பாக்யத்தை தனக்களித்த அந்த தயாபரனை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

    "நீ பாட்டுக்கு பாலை கொதிக்க கொதிக்க வெச்சுட்டு, அவசர அவசரமா கெளம்பி வந்துட்டே! அதான்.....வாயெல்லாம் வெந்து போய்டுத்து!.."

    அவருக்கு அப்போதுதான் தான் பெரியவா படத்துக்கு முன் பாலை வைத்துவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது!

    சாஷ்டாங்கமாக பெரியவா பாதங்களில் விழுந்து கதறினார்! "மஹாப்ரபு ! என்னை மன்னிச்சிடுங்கோ!..."

    எத்தனை பக்தி அவருக்கு இருந்தால், கொதிக்கும் பாலை பெரியவா ருசி பார்த்திருப்பார்! படம்தானே, என்ற அலக்ஷியம் இல்லாமல், அவர் நம்பிக்கையோடு வைத்தது எத்தனை சத்யம் !

    கருணாமூர்த்தி பக்தர்களின் அன்பை எவ்வளவு இயல்பாக ஏற்றுக் கொண்டார்! எவ்வளவு அழகாக பக்தரின் நைவேத்யத்தை தான் ஏற்றதை பக்தருக்குத் தெரிவித்திருக்கிறர்! யசோதம்மாவுக்குக் காட்டிய அதே திருவாயைத் தன் பக்தனுக்குக் காட்டி அருளியிருக்கிறார். ...

    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

    Source: uma
Working...
X