Announcement

Collapse
No announcement yet.

ராம நாம மகிமை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராம நாம மகிமை

    ராம நாம மகிமை ....

    வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்
    என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,
    மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள்.
    அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு 33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று.

    ஒருஸ்லோகத்திற்கு 32 எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு
    ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார்.
    கோடி ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.அந்த எழுத்துக்கள்தான் ரா......... ம...............

    அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.



    http://gomathyamma.blogspot.com/2012/09/blog-post.html
Working...
X