வேத மத ம் - ஒலியும் படைப்பும் (Part 3)
ஒன்றுக் கொன்று உச்சாரணம் மாறுபட்டால் எத்தனை விபரீதம் உண்டாகிவிடும் என்பதற்கு, வேதத்திலேயே தைத்ரீய ஸம்ஹிதையில் ஒரு கதை இருக்கிறது. இந்திரனை வதைக்கக்கூடிய பிள்ளை தனக்குப் பிறக்க வேண்டும் என்பதற்காக த்வஷ்டா என்ற தேவதச்சன் ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினான். அப்போது அக்ஷரங்களின் உச்சரிப்பில் உதாத்தம், அநுதாத்தம் என்று சொன்னேனே, இந்த உயர்த்தல் -தாழ்த்தலில் அவன் தப்பு பண்ணியதாலேயே, அவன் விரும்பின பலனுக்கு நேர்மாறாக, 'இந்திரனை
வதைக்கக் கூடிய பிள்ளை'க்கு நேர்மாறாக, 'இந்திரன் வதைக்கக்கூடிய பிள்ளை', அதாவது இந்திரனால் வதைக்கப் படக்கூடிய பிள்ளை'தனக்கு வேண்டும் என்று அவன் பிரார்த்தித்ததாக ஆகிவிட்டது. கதையும் அப்படியே பிற்பாடு நடந்தது.
ரேடியோவில் ஒரு wave length (அலைவரிசை) கொஞ்சம் தப்பினால்கூட, வேறு ஏதோ ஸ்டேஷனை அல்லவா பிடித்து விடுகிறது?மயிரிழை தப்பாமல் ரேடியோவில் வேவ்-லெங்க்த் வைத்தால்தானே சரியாகக் கேட்கிறது?இப்படியே தான் வேத உச்சாரணமும். கொஞ்சம்கூட ஸ்வரம் தப்பிப் போகக் கூடாது. வேவ் - லெங்க்த் மாறினால் ஸ்டேஷன் மாறிவிடுகிற மாதிரி, வேத சப்தம் மாறினால் பலனே மாறிவிடும்.
இதனாலெல்லாந்தான் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ணவேண்டும் என்று வைத்தார்கள். "ச்ருதி" என்று ஸம்ஸ்கிருதத்திலும 'எழுதாக் கிளவி'என்று தமிழிலும் வேதத்துக்கு பேர் ஏற்பட்டது.
"ச்ருதி" என்ற பெயருக்கு இன்னொரு காரணமும் தோன்றியதைச் சொல்ல வந்தேன். மற்ற சாதாரண ஜனங்களுக்குக் கேட்காத இந்த திவ்ய சலனங்களின் சப்தங்கள் ரிஷிகளுக்குக் கேட்கத்தானே செய்தது?அதை அவர்கள் புஸ்தகத்திலே படித்தார்களா?அல்லத அவர்களாக இயற்றினார்களா?இரண் டுமில்லாமல் ஆதியிலேயே கேட்கப் பட்டு லோகத்துக்கு வந்ததாலும் "ச்ருதி"என்று சொல்லலாம் என்று தோன்றிற்று. ரிஷிகளுக்கு "மந்த்ர த்ரஷ்டா"க்கள் என்று பெயர் என்று சொன்னேன். 'த்ரஷ்டா'என்றால், பார்ப்பவன். "பார்ப்பான்"என்பதற் ;குக் கூட அதுதான் அர்த்தம். மந்திரங்களைப் 'பார்த்தவர்கள்'என்ற ;ால், அவர்கள் "மந்திரங்களைக் கேட்கவில்லை" என்று ஆகும். மந்திரங்கள் அவர்களுடைய கண்ணுக்கு அகண்ட ஆகாசத்தில் கூட்டங்கூட்டமாக தெரிந்தன என்று 'மந்த்ர த்ரஷ்டா'என்பதற்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
இதில் எது சரி?பார்த்தார்களா? கேட்டார்களா? பார்த்தார்கள் என்றால் வேதமந்திரங்கள் எந்த லிபியில் எழுதியிருந்தது?தேவ நாகரி, கிரந்தம், எல்லாவற்றுக்கும் மூலமான ப்ராம்மி முதலான எந்த லிபியும் இல்லாத காலத்தில், எந்த எழுத்தில் மந்திரங்கள் தெரிந்தன?வேத சப்தங்களையும், ஸ்வரங்களையும் உள்ளது உள்ளபடி எந்த லிபியிலும் எழுதி முடியாதே!
இதற்கெல்லாம் பதில் என்னவென்றால், பார்த்தார்கள், கேட்டார்கள் என்றெல்லாம் சொன்னாலும், வாஸ்தவத்தில் வேத மந்திரங்கள் ரிஷிகளுடைய உயர்ந்த தியான நிலையில் அவர்களுடைய ஹ்ருதயத்திலே ஸ்புரித்தன, அதாவது flash ஆயின என்பதுதான். அந்த நிலையில் அவர்களுடைய கண் பார்க்காமலும், காது கேட்காமலுங்கூட இருந்திருக்கும். அப்படி அப்படியே உள் மனஸில் மந்திர ஸப்தங்கள் flash ஆகியிருக்கும்.
காண்பது, பார்ப்பது என்பது கண்ணால் செய்கிற காரியத்தை மட்டும் குறிப்பதல்ல. எல்லா உணர்ச்சியையும் அது குறிக்கும். "ஒருத்தன் வாழ்க்கையில் பல இன்ப துன்பங்களைக் " கண்டான் " என்று சொல்கிற இடத்தில், 'கண்டான்'என்றால் கண்ணால் பார்த்தான் என்று மட்டுமா அர்த்தம்?'அநுபவித்தன்'என்பதுதானே அதன் பொருள்?
'மந்த்ர த்ரஷ்டா'என்றாலும், இப்படியே அநுபவித்தில் தெரிந்து கொண்டதாக வைத்துக் கொள்ளலாம்.
வேதம் சப்த ரூபத்தில் இருப்பதால் அதை நம்முடைய காதுகளுக்கு மேற்பட்ட திவ்ய சக்தி பெற்ற காதுகளால் (திவ்ய ச்ரோத்ரத்தால்) ரிஷிகள் கேட்டுக் கொண்டார்கள் என்றும் சொல்வதுண்டு.
அர்ஜுனன் பகவானின் விச்வரூபத்தைப் பார்க்க ஆசைப்பட்டான்;அப்போ து கிருஷ்ண பரமாத்மா, 'இந்த உன் கண்ணால் என் விச்வரூபத்தை பார்க்க முடியாது. உனக்கு அதற்கான வேறு திருஷ்டியை, தெய்விகமான பார்வையைத் தருகிறேன் என்று சொன்னதாகக் கீதையில் இருக்கிறது.
" திவ்யம் ததாமி தே சக்ஷ : "
அர்ஜுனனுக்கு திவ்ய சக்ஷஸ் (தெய்விக ஆற்றல் வாய்ந்த கண்) உண்டானது போல், ரிஷிகளுக்கு பரமாத்மாவிடமிருந் தோன்றி அகண்ட ஆகாசத்தில் வியாபித்திருந்த மந்திர சப்தங்களைக் கிரஹிக்கக் கூடிய திவ்ய ச்ரோத்ரம் (தெய்வீக சக்தி வாய்ந்த காது) உண்டாகியிருந்தது.
லோக ச்ருஷ்டிக்கும் லோக வாழ்க்கைக்கும் வேண்டிய சப்த சலனங்களை மட்டும்தான் வேதம் கொடுக்கிறது என்றில்லை. இதைத் தாண்டி பரமாத்ம ஸத்யத்தோடு ஒன்றாகப் போய் விடவும் அதில் மந்திரங்கள் இருக்கின்றன. ஒருத்தன் வந்த வழியாகவே திரும்பிப் போனால் புறப்பட்ட இடத்துக்கே போய் சேரந்து விடுவான் அல்லவா? அந்த மாதிரி ஸ்ருஷ்டி எப்படி வந்தது என்று பார்த்துக் கொண்டே போகிற போது, கடைசியில் சலனமே எழும்பாத ஸ்தானத்துக்கு அது கொண்டு விட்டுவிடுகின்றது. சில மந்திரங்களினால் ஏற்படும் நாடி சலனமே அங்கே அழைத்துப் போகிறது. உபநிஷத் மஹா வாக்யங்கள், பிரணவம் எல்லாம் இப்படிப் பட்டவைதான்.
இவ்வளவும் எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், வேதத்தை யாரும் இயற்றவில்லை;ரிஷிகளம் இயற்றவில்லை;பரமாத் மாவுமேகூட யோசித்து யோசித்து ஒலைச் சுவடியும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு வேதத்தை எழுதவில்லை என்று விளக்குவதற்குத்தா
Jaya Jaya Shankara Hara Hara Shankara.
Source:subadra