அநாதி - அபௌருஷ்யம்
அநாதி - அபௌருஷ்யம் அநாதியாக என்றால் என்ன அர்த்தம்? வேதத்துக்குக் காலமே சொல்ல முடியாது; அதற்கு முந்தையதாக, அதற்கு ஆதியாக எதுவும் இல்லை என்பதுதான் 'அநாதி'என்ற வார்த்தைக்கு அர்த்தம். அப்படியானால் அது என்றுமே இருந்திருக்கிறது என்று அல்லவா அர்த்தமாகும்? இப்படிச் சொன்னால் எப்படிப் பொருந்தும்? ஒரு புஸ்தகம் என்றால் அதை ஒருவரோ பல பேரோதான் எழுதியிருப்பார்கள"ஒல்ட் டெஸ்ய்மென்டில்" பல ப்ராபெட்கள் சொன்னதைச் சேர்த்துப் போட்டிருக்கிறது. "நியூ டெஸ்ட்மென்டி"ல் கிறிஸ்துவின் உபதேசங்களைச் சொல்லியிருக்கிறது. முகமது நபி சொன்னதை குரான் தெரிவிக்கிறது. இவர்கள் யாவரும் ஏதோ ஒரு காலத்தில் இருந்தவர்கள்தான். அவர்களுக்கு முந்தி அந்த உபதேசம் இல்லை. இப்படியே வேதத்தையும் யாரோ ஒருத்தரோ, பல பேரோ எழுதியிருக்கவேண்டம். அவர்கள் ஒவ்வொரு காலத்தில் இருந்திருப்பார்கள அது ரொம்ப ரொம்ப முந்தைய காலம், பதினாயிரம் வருஷத்துக்கு முந்தயை காலம், அல்லது லக்ஷம் வருஷத்துக்கு முந்தயை காலம் என்று வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனாலும் 'அநாதி'என்று சொல்லிவிட்டால் தப்புத்தானே? அந்தப் பத்து லக்ஷ ம் வருஷத்துக்கு முந்தி வேதம் இல்லாமல்தானே இருந்திருக்க வேண்டும்?
இந்த மாதிரி கேள்விகள் எழும்புகின்றன. வேதங்களை யாரோ மநுஷ்யர்கள் எழுதினார்கள் என்றால் இப்படிக் கேட்பது நியாயம்தான். அதை அநாதி - ஆதியற்றது - என்பது தப்புத்தான். ஆனால் இது சரிதானா?
சரியாகத்தானே இருக்கவேண்டும்? ஒரு புஸ்தகம் என்றால் அதை யாரோ மநுஷ்யர்கள் தான் எழுதியிருக்க வேண்டும். அதனால் அநாதி என்பது சரியில்லைதான் - இப்படித் தோன்றுகிறது.
வேதத்தை ரிஷிகள் என்ற மநுஷ்யர்கள் பண்ணினார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் படித்த சரித்திர புஸ்தகத்தில் அப்படித்தான் போட்டிருக்கிறது. அதில் போட்டிருப்பது மட்டுமில்லை.
வேதம் என்பது பல ஸ¨க்தங்களைக் கொண்டது. ஞானஸம்பந்தரின் தேவாரம் என்றால் அதில் பல ஸ¨க்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பதிகத்திலும் பத்துச் செய்யுள்கள் இருக்கிற மாதிரி, ஒவ்வொரு ஸ¨க்தத்திலும் பல மந்திரங்கள் இருக்கின்றன. ஸு+உக்தம் என்பதே 'ஸுக்தம்'. ஸு என்றால் 'நல்ல'என்று அர்த்தம். 'ஸுகுணம்' , 'ஸுலோசனா'என்றெல்லாம சொல்லுகிறோம் அல்லவா? 'உக்தம்' என்றால் 'சொல்லப்படுவது', அதாவது வாக்கு. ஸ¨க்தம் என்றால் நல்வாக்கு என்று அர்த்தம்.
சாஸ்திரோக்தமாக வேதத்தைச் சொல்கிறபோது, அதிலிருக்கிற ஒவ்வொரு ஸ¨க்தத்துக்கும் இன்னார் KS, அது இன்ன மீட்டரில் (சந்தஸ்) இருக்கிறது, அது இன்ன தேவதையைக் குறித்தது என்று சொல்லிவிட்டுத்தானஆரம்பிக்கிறோம். இப்படி அநேகம் ரிஷிகளின் பெயர்களிலேயே வேத மந்திரங்கள் இருப்பதால், இந்த ரிஷிகள்தான் இவற்றைப் பண்ணியிருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒவ்வொரு ரிஷியும் இன்னார் பிள்ளை, இன்ன கோத்திரம் என்று அவர்களுடைய மூதாதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறது.
"அகஸ்த்யோ மைத்ராவருணி" என்றால், மித்ரா வருணர்களின் பிள்ளையான அகஸ்தியர் என்று அர்த்தம். இப்படி ஒவ்வொரு ரிஷியின் பேரில் மந்திரங்கள் இருக்கின்றன என்றால், அகஸ்தியர் பேரில் இருப்பது அவரது தகப்பனாரான மித்ரா வருணர்கள் காலத்தில் இல்லை என்று தானே அர்த்தமாகும்? அப்படியானால் அநாதி என்பது சரியில்லைதானே?
இப்படியெல்லாம் கேட்கிறபோது, ஒவ்வொரு ரிஷியின் பேரில் வேத மந்திரங்கள் இருப்பதால் அந்த ரிஷியே அதைச் செய்தார், இயற்றினால், compose பண்ணினார் என்று தப்பாக நினைத்து விடுகிறோம். உண்மையில் அந்த ரிஷிகள் மந்திரங்களைத் தாங்களே இயற்றவில்லை.
வேதத்துக்கு "அபௌருஷேயம்" என்றுதான் லக்ஷணம் சொல்லியிருக்கிறது. ஒரு புருஷன் அல்லது மநுஷ்யன் செய்திருந்தால் அது பௌருஷேயம். எந்த மனிதருமே செய்யாததனால் அது அபௌருஷேயம். ரிஷிகள் இயற்றிருந்தாலும் அது பௌருஷேயமாகிவிடும். ஆனால் அபௌருஷேயம் என்பதால் ரிஷிகளும் வேத மந்திரங்களைப் பண்ணவில்லை என்று ஆகிவிட்டது. மந்திரங்களை ரிஷிகள் இயற்றியிருந்தால் அவர்களுக்கு 'மந்திரங்களை ரிஷிகள் இயற்றியிருந்தால் அவர்களுக்கு "மந்திரகர்த்தா"என்ற பெயர் இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் அவர்களுக்கு "மந்திரத்ரஷ்டா" என்றுதான் பெயர் இருக்கிறது. இதற்கு "மந்திரங்களைக் கண்டவர்கள்" என்றே அர்த்தம்; செய்தவர்கள் என்று அர்த்தமில்லை.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்றால் என்ன அர்த்தம்? அமெரிக்காவை அவரா உண்டு பண்ணினார்? இல்லை. ஏற்கெனவே இருந்த அமெரிக்காவை அவர் உலகுக்குத் தெரியும்படியாகப் பண்ணினார். இப்படியே தான் நியூடன், ஐன்ஸ்டீன் முதலிய எந்த விஞ்ஞானியும் புதுசாகச் சொல்கிற விதிகளை அவர்கள் செய்யவில்லை.
நியூடன் சொல்லித்தானா ஒரு வஸ்துவை எறிந்தால் அது பூமியில் விழுகிறது? இல்லை. ஏற்கெனவே இருக்கிற விதிகளை இவர்கள்தான் புரிந்துகொண்டு லோகத்துக்குத் தெரிவித்தார்கள். அதே மாதிரி ஏற்கெனவே இருந்த மந்திரங்களைத்தான் அத்தனை ரிஷிகளும் கண்டுபிடித்து லோகத்துக்குக் கொடுத்தார்கள். அந்த மந்திரங்கள் இவர்களுடைய அப்பா, தாத்தா கால்த்துக்கும், அதற்கும் முந்தியுங்கூட இருக்கத்தான் செய்தன. ஆனால் அப்போது அவை உலகுக்குத் தெரியவில்லை. இவர்கள்தான் அவற்றைக் கண்டுபிடித்தார்கள. அதனால் இவர்கள் பேரிலேயே அவற்றைச் சொல்வது வழக்கமாகிவிட்டது. ஒருத்தன் புஸ்தகம் எழுதுகிறான். இன்னொருத்தன் பப்ளிஷ் செய்கிறான்;ஒருத்தன ஸினிமா எடுக்கிறான்; இன்னொருத்தன் act பண்ணுகிறான். இப்படி மந்திரங்களை லோகத்துக்கு வெளியிட்டவர்கள் மட்டுமே தான் ரிஷிகள். ஏற்கெனவே அவை இருந்தாலும், நமக்குப் ப்ரயோஜனமாகிறபடி வெளிப்படுத்தி பரம உபகாரம் பண்ணினது ரிஷிகள்தான். அதனால் அவர்கள் பெயரைச் சொல்லி நமஸ்காரம் பண்ணுவது நியாயம்தான்.
Contd……….Part 2……….