கனவில் கிடைத்த உத்தரவு
மஹா பெரியவா ஸித்தி அடைந்த பிறகும் அருள் பாலித்த அற்புதமான நிகழ்ச்சி!
மஹா பெரியவாளுடன் காஞ்சியில் தங்கி மஹானின் தேவைகளை மிகவும் சிரத்தையாகவே கவனித்துக் கொண்டு இருந்தவர் மேச்சேரி பட்டு சாஸ்திரி. சாஸ்திரி மெத்தப் படித்த வித்வானான தனது வித்வத்தன்மையை வெளிக்காட்ட மாட்டார். அவ்வப்போது மஹான் அவரைப் பல கைங்கர்யங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதுண்டு. வருடா வருடம் மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தை மூன்று நான்கு நாட்கள், ஏன் ஒரு வாரமே ஆக்ரமித்து, அங்கே மஹானின் ஜெயந்தியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்.
இவருக்கேற்ற மகன் மௌலி. மஹானின் கைங்கர்யத்தில் தந்தை கொஞ்சம் என்றால் மகன் அவருக்கு ஒரு படி மேலே. இதில் என்ன குறை என்றால் இவர்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் பொருள் வசதி இல்லை. யாரோ சிலர் அவ்வப்போது உதவும் தொகை போதுமானதாக இருக்காது.
வீட்டில் உள்ள பெண்களின் நகை, கடன் என்று பல வகைகளில் பணத்தைச் சேர்த்து மஹானின் ஜெயந்தியை மிகவும் விமர்சையாக நடத்தி வருவார்கள். ஒரு வருடம் சாஸ்திரியாருக்கு ஒர் ஆசை. மஹானின் திருவுருவத்தை சிலையாக வடித்து வைத்துப் பூஜை செய்ய வேண்டும்! அவர் ஏற்கனவே இப்படி இரு சிலைகளை சேலத்தில் பக்தர்கள் வீட்டில் பார்த்திருக்கிறார
மனதில் எண்ணம் தோன்றியவுடன் அதை உடனே செயலாக்கினார். இவருக்கென்று ஸ்வாமிமலையில் ஒரு ஸ்தபதி கிடைத்தார். இருவர் எண்ணங்களும் ஒன்றாகவே, மஹான் சிலையை தத்ரூபமாக உருவாக்கினார். குறித்த காலத்திற்கு முன்பே சிலை வந்து விட்டதால் பட்டு சாஸ்திரி பணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கவில்லை. ஜெயந்திக்கான செலவு அபரிமிதமாக இருந்தது. சிலையைக் கொண்டு வந்து கொடுத்த ஸ்தபதிக்கு என்ன கஷ்டமோ, “பணத்தைப் பெற்றுக் கொண்டே ஊருக்குப் போகிறேன்” என்று அங்கேயே தங்கி விட்டார்.
சாஸ்திரிகளும் அவரது மகனும் கேட்காத இடம் பாக்கி இல்லை. தொகை என்னவோ வெறும் ஆறாயிரம் ரூபாய் தான். ஏற்கனவே நன்கொடை வழங்கியவர்களை மீண்டும் அணுக முடியாது. புதிதாக யாரும் தர முன் வரவில்லை. இப்படியெல்லாம் சோதனை வருகிறதே என்று தந்தையும் மகனும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்கள் படும் பாடு, எல்லாம் தெரிந்த மஹானுக்குத் தெரியாதா என்ன?
அப்போது கடம் விநாயகராம் அமெரிக்காவிலே இருந்தார். அங்கே அவர் பல கச்சேரிகளில் கலந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட தினத்தன்று அவரது கனவில் தோன்றிய மஹான், அவரை சென்னையில் உள்ள அவர் மகன் மூலமாக பட்டு சாஸ்திரிக்கு ஆறாயிரம் ரூபாயைக் கொடுக்கும்படி சொன்னார்.
இது கனவு தானே என்று கடம் மாஸ்டர் தொடர்ந்து தூங்க ஆரம்பித்தார். அடுத்த தடவை இவரை யாரோ தொட்டு எழுப்பியது போன்ற உணர்வுகளுடன் அதே கனவு.
இது மஹானின் உத்தரவு தான் என்று புரிந்து கொண்ட கடம் மாஸ்டர், உடனே சென்னையில் இருந்த மகனிடம் தகவல் சொல்லிவிட அன்றே பணம் பட்டு சாஸ்திரியின் கைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட அற்புதம்!
தன் சிலை செய்த கூலியை மஹானே கொடுத்து உதவியிருக்கிறார். வாய் ஓயாமல் பட்டு சாஸ்திரி இந்த மகத்தான உதவியை அன்று பூராவும் அயோத்தியா மண்டபத்திற்கு வந்தவர்களுக்கெல்லம் தெரிவித்துக் கொண்டு இருந்தார்.
நாம் நல்ல நிலையில் இருக்கிறோம். நம் உதவி பெறுபவர் நம்மை விட தாழ்ச்சியாக இருக்கிறார், ‘நாம் கருணை காட்டுகின்றோம்’ என்று நினைக்கும்போதே, நாம் செய்யும் – செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிற. உபகாரம் செய்வதன் பலனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்காரம் இல்லாமை ஆகியவை உண்டாக வேண்டும்.
Source:Pattu Sastri