Announcement

Collapse
No announcement yet.

ஆஹாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆஹாரம்

    ஆஹாரம்

    Kalki, Maha Periyavaa,


    ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமில்லை. பஞ்ச இந்திரியங்களுக்கு& ஒவ்வோர் ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு, பேச்சுக்களைக் கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படியே நாம் அனுபோகம் பண்ணுகிறதெல்லாம் நமக்கு ஆஹாரம்தான். இதில் எல்லாமே சுத்தமானதாய் இருக்க வேண்டும். மனசைக் கெடுக்கிற காட்சிகளைப் பார்க்கப்படாது; மனசைக் கெடுக்கிற பேச்சுக்களைக் கேட்கக் கூடாது; அனுபவிக்கிற தெல்லாம் ஈச்வர ஸாக்ஷாத்காரத்துக்& உதவுகிறவையாகவே இருக்க வேண்டும்.

    இப்படி பொதுப்படையாகச் சொன்னாலும், இந்தப் பலவிதப் புலன்-நுகர்ச்சிக்க ான ஆஹாரங்களிலும் வாயால் நுகர்கிற ஆஹாரந்தான் முக்கியமாக இருப்பதால் அதைப் பற்றி இவ்வளவு ஆசார விதிகள் ஏற்படுத்தியிருக்கறார்கள். இதுதான் ஸ்தூலமாக நமக்கு உள்ளேயே போய், தேகம் முழுக்க ரத்தமாக வியாபிக்கிறது; இதுவே சித்தத்தையும் பாதிக்கிறது. ஒரு பக்கம் ஆஹாரமில்லாவிட்டால& மனுஷ்யன் ஜீவிக்கவே முடியவில்லையென்றா& இன்னொரு பக்கமோ அது மித ஆஹாரமாக இல்லா விட்டால் தேஹத்துக்கும் சிரமம், மனசுக்கும் அசாந்தி என்றாகிறது. வயிற்றிலே திணித்துக் கொண்டே போவதால் சாப்பாட்டுப் பொருளுக்கும் நஷ்டம், காரியம் செய்ய முடியாமலும் நஷ்டம், இவற்றைவிட தியானத்தில் மனசு ஈடுபடாமல் போவது பெரிய நஷ்டம். ஆகையால் ‘சோற்றால் அடித்த பாண்டம்’ என்றே மனுஷ்யனுக்குப் பேர் இருப்பதால் இந்தப் பாண்டமும், இதற்கு உள்ளே யிருக்கிற மனசும் நல்லபடியாக வளர்வதற்காக ரிஷிகள் காட்டிக் கொடுத்திருக்கும் போஜன விதிகளை மேற்கொண்டு நடத்திக்காட்ட வேண்டும். இதன் முக்கியத்துவமும் அவசியமும் எல்லோருக்கும் புரிவதற்குப் பரமேச்வரனைப் பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன்.

    பக்தி, ஞானம், உயர்ந்த குணங்கள், உத்தமப் பண்புகள் ஆகியவற்றால்தான் மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்பது அர்த்தம். இந்தக் குண விசேஷங்கள் விருத்தியாகவும் ஆஹார நியமமே உதவுகிறது என்று நம் சாஸ்திரங்கள் காட்டுகின்றன.
    - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

    –நன்றி கல்கி


Working...
X