Announcement

Collapse
No announcement yet.

sitanagaram

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sitanagaram

    சீதாநகரம், குண்டூர்
    கண்டிப்பாக பார்க்க வேண்டியவை
    குண்டூர் மாவட்டத்திலுள்ள இந்த சிறு நகரம் இந்தியாவின் கிழக்குக்கடற்கரையிலுள்ள ஒரு பழமையான ஊராகும். இது குண்டூர் நகரத்திலிருந்து 18 மைல் தூரத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையிலேயே உள்ளது.16 லட்சம் வருடங்களுக்கு முன்பே திரேதா யுகத்திலிருந்து இந்த நகரம் இருந்து வருவதாக புராணக்கருத்துகள் நிலவுகின்றன. ராமாயண காவியத்திலும் இந்த நகரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.சீதாநகரம் இங்குள்ள சோமேஸ்வரர் ஸ்வாமி கோயிலுக்கு புகழ் பெற்றுள்ளது. புராணக்கதைகளின்படி, சீதை கடத்தப்பட்ட செய்தியைக்கேட்டு இந்த கோயில் ஸ்தலத்தில்தான் ராமன் கண்ணீர் விட்டதாக சொல்லப்படுகிறது. இப்படி ஒரு பின்னணியில்தான் இந்த நகரத்துக்கு இப்பெயர் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.சோமேஸ்வரர் ஸ்வாமி கோயில் மட்டுமல்லாமல் இந்த நகரத்தில் ஒரு வேத பல்கலைக்கழகமும் உள்ளது. ஜீயர் கல்வி அறக்கட்டளை மூலமாக நடத்தப்படும் இந்த வேதக்கல்லூரி இந்தியாவிலேயே இது ஒன்றுதான் எனும் பெருமையை கொண்டுள்ளது.
Working...
X