Announcement

Collapse
No announcement yet.

கேள்வி-பதில்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கேள்வி-பதில்

    விஷ்ணு சஹஸ்ரநாமம் :
    "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.." என்ற ஸ்லோகத்தை சொன்னாலே போதும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூராவும் கூறின பலன் கிடைத்து விடும் என்பது சரிதானா. சஹஸ்ரநாமம் பூராவும் சொல்ல தேவை இல்லையாமே?
    இந்த மாதிரி கருதுவது சரியல்ல. விஷ்ணு சஹாஸ்ரனமதிர்க்கு பதிலாக எந்த ஒரு குறிப்பிட்ட ஸ்லோகமும் ஈடாகாது.பலன் வேண்டுமெனில் முழுமையாக சொல்லவேண்டும்.சந்தகமே வேண்டாம்.ஆனால் அவகாசம் இல்லாத சமயங்களில் ,சரியாக உச்சரிக்க இயலாத சமயங்களிலும் நீங்கள் மேலே குறிப்பிட்ட பகுதியை கூறி மனசாந்தி பெறலாம்.(இந்த சுலோகம் ராம நாமத்தின் பெருமையை குறிக்கின்றது.மிகவும் விஷஷமானது.


    தொலை காட்சியில் பக்தி.?
    இப்போதெல்லாம் தொலை காட்சியில் பக்தி,ஆன்மிகம் எல்லாம் வந்த வண்ணம் உள்ளன.அவற்றினால் நன்மையா?
    நன்மையோ, தீமையோ நாம் ஏமாறக்கூடாது.ஏதாவொரு சானலில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஓட நாம் அதை காதால் கேட்டு கொண்டு இருப்போம் .நம்மை அறியாமலே எதோ ஒரு திருப்தி ஏற்பட்டுவிடும்.நாமே பாராயணம் செய்த புண்ணியம் நமக்கு கிடைத்து என்ற நினைப்பே. நாம் வாய் விட்டு சொன்னால்தான் பலன்.அதே மாதிரி தான் ஆலய தரிசனமும்.நாம் நேரில் சென்று தரிசித்தால்தான் வேண்டிய பலன் கிடைக்கும்.


    சுமங்கலி பிராத்தனை'
    சுமங்கலி பிராத்தனையை எப்போது நினைத்தாலும்,செய்யலாமா?
    பொதுவாக சுமங்கலி பிராத்தனை ஒரு வருஷத்தில் ஒரு தடவை தான் செய்யவேண்டும்.இது வைதீக கர்மா அல்ல..ஆனால் முக்கியத்வம் வாய்ந்தது.பிக்க பக்தி ச்ரத்தையுடன் அவரவர்கள் குடும்ப சம்பிரதாயப்படி நடத்த வேண்டும். நல்ல யோகாதிகளை பார்த்து நல்ல நாளாக தேன்றுஎடுக்கவேண்டும்.இப்போதெல்லாம் சில இல்லங்களில் பெண்டுகளாக இருக்கும் விவாஹம் ஆன பெண்களுக்கு 6 கஜம் புடவை அளிக்கிறார்கள்
    .இது கூடாது.9 கஜம் புடவையைத்தான் பூஜையில் வைத்து பிறகு அதை அணிவதுதான் முறை.மேலும் சுமங்கலி பெண்களை வரிக்கும்போது ,கன்னிப்பெண்கள் ஆகவோ ,சுமங்களிகலாகவோ இருப்பார்கள்.புடவைக்கான இல்லை கன்யா பெண்கள் யாவரையும் சேர்த்து ஒற்றை படையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பொதுவாக அவரவர்கள் குடும்ப வழக்கப்படி இது நடைபெற வேண்டும்.



    நன்றி;(ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள் )
Working...
X