
அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறித் தாழ
அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியாத
மணிக் குழவி உருவின்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்
தளர் நடை நடவானோ?
பொருள்: கருமையான சிறிய மலைப்பாறைகளின் மீது அருவிநீர் பாய்ந்து அழகு செய்கின்றது. அதைப்போல, உயர்ந்த நீலமணி வண்ணனும், வாசுதேவனின் பிள்ளையுமான கண்ணன் இடையில் அணிந்திருக்கும் சங்குவடம் மேலும் கீழும் அசைந்தாடும்படியாக தளர்நடை இட்டு நடந்து வர மாட்டானோ?