
பனி படு சிறு துளி போல்
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி
இற்று இற்று வீழ நின்று
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்
உடை மணி கண கண என
தடந்தாள் இணை கொண்டு சார்ங்கபாணி
தளர் நடை நடவானோ?
பொருள்: தாமரை மலர் தன் இதழ்களைப் பரப்பி மலர்ந்தது. அதில் சிறு சிறு துளியாய் பனி படர்ந்தது. அதுபோல, கண்ணனின் செவ்வாய் இதழ் விரிந்து நீர் சுரந்து வழிந்தது. வழிந்த நீருடன், காளையின் கழுத்தில் கட்டிய மணிபோல இடுப்பில் கட்டிய சதங்கை " கண கண ' என்று ஒலிக்க இரு திருவடிகளாலும் தளர்நடை போட்டு சாரங்கபாணியாகிய அவன் தள்ளாடி வருவானா?