
உள் அடி பொறித்து அமைந்த
இரு காலும் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்
இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல்
பின்னையும் பெய்து பெய்து
கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை
தளர் நடை நடவானோ?
பொருள்: கடல் போன்ற கார்வண்ணனே! மன்மதனின் தந்தையே! திருப்பாதம் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் சக்கரமும் ரேகையாகக் கொண்ட மூர்த்தியே! அடி வைத்த இடமெல்லாம் அடையாளம் காட்டியதுபோல நடந்து வந்தவனே! பொங்குகின்ற மகிழ்ச்சி உன்னைக்கண்டால் மேலும் பொங்கும். கண்ணா தளர்நடை போட மாட்டாயா?