
மொடு மொடு விரைந்து ஓட
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்
பெயர்ந்து அடி இடுவது போல்
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்
பலதேவன் என்னும்
தன் நம்பி ஓடப் பின்கூடச் செல்வான்
தளர் நடை நடவானோ?
பொருள்: குட்டி வெள்ளிமலை போல சிவந்த ஒருவன், "திடுதிடு' என்று விரைந்து ஓடினான். அவனைப் பிடிக்க கருமலை போன்ற குட்டிச்சிறுவன் அடி எடுத்து வைத்துச் சென்றான். முன்னே சென்றவன் உலகம் எல்லாம் எல்லையில்லாத புகழ் பெற்றவன் பலராமன். அண்ணனாகிய இவன் முன்னே ஓடினால், அவனைப் பிடிக்க பின்னால் கண்ணன் தளர்நடையிட்டுச் செல்ல மாட்டானா?