
சூழ் பரி வேடமு மாய்
பின்னல் துலங்கு மரசிலையும்
பீதகச் சிற்றாடை ஒடும்
மின்னற் பொலிந்தது ஓர் கார்முகில் போலக்
கழுத்தினில் காறை யொடும்
தன்னில் பொலிந்த இருடீ கேசன்
தளர் நடை நடவானோ?
பொருள்: வெண்நிலாவினைச் சுற்றி மின்னல் கொடிபோல சூழ்ந்திருக்கும் தங்கரேகை போன்ற பொன் ஆபரணத்தையும், அரசிலை ஆபரணத்தையும், பட்டாடையையும் அணிந்த கண்ணனே! பிரகாசிக்கும் கரியமேகம் போன்ற கழுத்தில் "காறை' என்னும் அணிகலனை அணிந்தவனே! இருடீகேசனே! இந்த ஆபரணங்களை அணிந்த
அழகோடு தளர்நடையிட்டு வரமாட்டாயோ?