
தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும்மதப் புனல் சோர வாரணம்
பைய நின்று ஊர்வது போல
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
உடைமணி பறை கரங்க
தடந்தாள் இணை கொண்டு சாரங்க பாணி
தளர் நடை நடவானோ
பொருள்: சாரங்கம் என்னும் வில்லேந்திய திருமாலே! கட்டியிருக்கும் சங்கிலிகள் "சலார் பிலார்' என்று அசைந்தாடவும், பொன்னால் ஆன சதங்கை மணிகள் ஒலி எழுப்பவும், யானை மெல்ல நடப்பது போலவும், அதன் உடலில் கிண்கிணிகள் ஆரவாரம் செய்யவும், உடையில் கட்டி இருக்கும் சிறுமணிகள் பறைபோல ஒலிக்கவும் இரு பாதங்களையும் அசைத்து தளர்நடை போட மாட்டாயோ?