Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 219 - பெரியாழĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 219 - பெரியாழĮ

    ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
    நாட் கமழ் பூம்பொழில் வில்லிப்புத்தூர்ப் பட்டன்
    வேட்கையால் சொன்ன சப்பாணி ஈர் ஐந்தும்
    வேட்கையினால் சொல்லுவார் வினை போமே.
    பொருள்: <இந்த உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் ஆட்கொண்டு அருள்புரிவதற்காகவே, மகாவிஷ்ணு ஆயர்குலத்தில் கண்ணனாக அவதரித்தார். மலர்கள் நிறைந்த சோலைகள் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழும் பெரியாழ்வார் அன்பினால் பாடிய இந்தப் பாடல்களைப் பக்தியோடு படிப்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பாவங்கள் நீங்கும்.
    விளக்கம்: கண்ணனை ஒன்பது மாதக்குழந்தையாகக் கருதி, பெரியாழ்வார் பாடிய பாடல்களின் விளக்கத்தை இவ்வளவு நாளும் படித்தீர்கள். படித்தவர்களெல்லாம் பாக்கியசாலிகள் என்று பெரியாழ்வாரே சொன்னபிறகு, மேலும் சொல்ல என்ன இருக்கிறது!
Working...
X