தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வான்நிலா அம்புலி சந்திரா! வா! என்று
நீ நிலா நின் புகழா நின்ற ஆயர்தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.
பொருள்: ஆயர்குல தலைவரான நந்தகோபர் தன் குழந்தையான கண்ணனின் அழகைக் கண்டு வியந்து,""வானத்தில் தவழும் வெண்ணிலவே! ஒளி மிக்க முற்றத்திலே நீ விளையாட ஓடிவா!'' என்று புகழ்ந்து அழைக்கிறார். அந்த நந்த
கோபனின் மனம் மகிழும்படி கண்ண
பெருமானே! நீ சப்பாணி ஆடி அருள்க!
குடந்தையில் பள்ளி கொண்டிருக்கும்
பெருமானே! சப்பாணி கொட்டி அருள்வாயாக.
குறிப்பு: ஒன்பது மாதக் குழந்தைகள் தங்கள் இருகைகளையும் சேர்த்து தட்டி ஒலி எழுப்பி விளையாடுவதை சப்பாணி என்பர்.