மடிசார்-பஞ்சகச்சம்
மடிசார்,பஞ்சகச்சம் போன்ற விசேஷ உடைகளை பற்றி சற்று விளக்கம் தரவும் ?
உங்களை அரியாமல் உங்கள் கேள்வியிலேயே தவறு நுழைந்துள்ளது. மடிசார்,பஞ்சகச்சம் போன்றவைகள் விசேஷ உடைகள் அல்ல.அவை நாம் நிய்த்யம் அணியவேண்டிவை.என்ன செய்ய,எவை எல்லாம் சர்வ சாதாரணமாக இருந்ததோ,அவையெல்லாம் இன்று முக்கிய விஷஷங்களில் சம்பந்தப்பட்டவை யாகிவிட்டன. சரி. விசேஷ தினங்களிலாவது இவற்றை அணிந்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் கர்மாக்கள் நஷ்டமாகும் .மேலும் இவற்றை அணிவது ஒன்றும் பெரிய பிரம்மவித்தை அல்ல.அப்யாசம் செய்தால் சுலமாக பழக்கமாகிவிடும் .
இன்று சுடிதார்,பேன்ட் போன்றவை பழக்கததிர்க்கு வந்து விட்டன.இருந்துவிட்டு போகட்டும் ஆனால் குறைந்தது கோவில்களுக்கும் ,வேதபாராயணம் நடக்கும் இடங்களுக்கும்,ஆச்சர்ய சுவாமிகளை தரிசிக்க செல்லும் போதாவது மடிசார்,பஞ்சகச்சதிலும் கன்னிபெண்கள்,புடவை,பாவாடை தாவணியிலும் செல்வது உசிதம் .
அப்ரதக்ஷினம்:
சில ஜோதிடர்கள் கோவிலில் நவக்ராஹங்கலையும்,மற்றும் சில தேவதைகளையும் ,அப்ரதக்ஷினமாக சுற்ற வேண்டும் சொல்கிறார்கள் .செய்யலாமா?
கோவில்களில் எப்போதும் எந்த தேவதைகளையும் ப்ரதிக்ஷனமாகத்தான் சுற்றவேண்டும்.
அப்ப்ரதிக்ஷமாக சுற்றக்கூடாது என்பது நமது சம்ப்ரதாயம்.
மடி,ஆசாரம்.
சென்னை போன்ற பட்டினங்களில் ஒன்று அல்லது இரண்டு அறைகள் உள்ள பிளாட்டுகளில் வசிப்பவர்களால் ,மடி ஆசாரம் பார்க்க முடியவில்லை.என்ன செய்வது?
மடி,ஆசாரம் அவசியம் தேவை.முடிந்த வரை இடர்த்திக்கு தகுந்தாற்போல் அனுஷ்டிக்கலாம். உங்கள் ஆதங்கம் புரிகிறது.குறைந்தது நாள் கிழைமைகளிலும் ,பித்ரு காரியங்கள் நடக்கும்போதும் முன் ஜாக்ரிதையாக கூடுமான வரை மடோ,ஆசாரத்தில் கவனம் செலுத்தவும்.நலம் பெற்று இருப்பீர்கள் .,