Announcement

Collapse
No announcement yet.

தர்மக்கணக்கில் வரவு வையுங்க!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்மக்கணக்கில் வரவு வையுங்க!

    மழை நாளில் அடுப்பு பற்ற வைப்பது சிரமம். நெருப்பு அணைவது போல இருக்கும். அதனால், அடுப்பில் இருக் கும் நெருப்புப்பொறிகளை விடாமல் விசிறி, பற்ற வைப்பார்கள். அதுபோல, தர்மத்தையும், ஒழுக்கத்தையும் எல்லோரிடத்தும் பரவச் செய்ய வேண்டும். மனம் வேதாளம் போன்றது. வேதாளம் கட்டுப்பட்ட பின்பு எவ்வளவு காரியங்களை செய்ததோ, அதைப் போலவே மனமும் செய்யும். இந்த மனத்தை நம் வசப்படுத்துவதே யோகம் என்பதாகும். நாள்தோறும் மனம், வாக்கு, உடம்பு மற்றும்பணத்தால் தர்மம்செய்யவேண்டும். தர்மம் என்பது நாள்தோறும் செய்யும்
    செலவில் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உடம்பு போனவுடன் நம்முடையதெல்லாம் நம்முடன் துணைக்கு வராது. ஆனால், இந்த பணத்தையெல்லாம் தர்மக்கணக்கில் வரவு வைத்தால் அது எங்கேயும் நம் கூட வரும். ராமன் காட்டுக்கு செல்லும்முன் தாய் கோசலையிடம் விடைபெற்றான். ஊருக்குப் போகும் பிள்ளையிடம் தாயார் பட்சணம் கட்டிக் கொடுப்பது வழக்கமல்லவா? பதினான்கு ஆண்டுக்கும் கெடாத பட்சணத்தை அவள் கொடுத்தனுப்பினாள். அது தான் தர்மம். தைரியமாகவும், நீதியாகவும் எந்த தர்மத்தை காத்தாயோ அந்த தர்மம் தலை காக்கும். அது ஒன்று தான் உன்னை என்றும் பாதுகாக்கும் என்று ஆசீர்வதித்தாள்.
    காஞ்சி பெரியவாள்
Working...
X