கல்யாணம் என்பது இக்காலத்தில் அக்கிரமமாக மாறிவிட்டது. நாம் எல்லோரும் பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்கள் தானே! அப்படி இருக்கும் போது பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். பெண்ணின் குலம், குணம் அறிந்து நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். நம்மைப் போல் மருமகளும் பெண் தானே என்று அபிமானமும் அனுதாபமும் பெண்களுக்கு ஏற்பட வேண்டும். ஊரில் எல்லோரும் வரதட்சணை வாங்குகிறார்கள். நாமும் வாங்கினால் தப்பில்லை என்று தாங்களாக நியாயம் கற்பித்துக்கொள்ளக் கூடாது. வெறுமனே சவுந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி பாராயணம் செய்தால் போதாது. அம்பாளுடைய பிரீதியைப் பெற வேண்டுமானால் வரதட்சணை கேட்டு பெண்வீட்டாரை நிர்பந்தம் செய்யக்கூடாது. நாங்கள் கேட்காமலே பெண் வீட்டில் கொடுத்ததால் வாங்கிக்கொண்டோம் என்று சொல்வதும் தப்பு தான். ஒருத்தர் செய்யும் செயல் செயின் ரியாக்ஷன் போல் பலரையும் பாதிப்பதாக அமைந்து விடுகிறது. வரதட்சணையே வேண்டாம் என்று சொல்வதே உயர்ந்த மனோபாவம். முடிவாக வரதட்சணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி திருட்டுச் சொத்து மாதிரி பயம் வேண்டுm
காஞ்சி பெரியவாள்
காஞ்சி பெரியவாள்