Announcement

Collapse
No announcement yet.

முடிந்த சேவையைச் செய்வோம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முடிந்த சேவையைச் செய்வோம்

    கல்வியின் பயன் நாம் அடக்கமுடையவர்களாக இருப்பது தான். ஆனால், நேர்மாறாக அகங்காரம் கொண்டவர்களாக பிள்ளைகள் வளர்வது பெருங்குறையாகும். பரம்பொருளான கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதே பயனுள்ள கல்வி.
    * நமஸ்காரம் செய்வதைத் "தண்டம் சமர்ப்பித்தல்' என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல, கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம்.
    * அகிம்சையைப் பின்பற்றினால், நாம் இருக்கும் இடத்தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத் தொடங்கும்.
    * வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் பாவங்கள் செய்து வருகிறோம். மாறாக புண்ணியசெயல்களைச் செய்து நம் பாவத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும். நன்மைகளைச் செய்வதற்குத் தான் நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.
    *அனாதைப் பிள்ளைகளை ஆதரிப்பது, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவிசெய்வது, பிராணிகளைப் பராமரிப்பது,குறிப்பாகப் பசுவை பாதுகாப்பது, பசித்தவர்களுக்கு அன்னமிடுவது இப்படி எந்தவிதத்திலாவது நாம் முடிந்த சேவைகளைச் செய்யவேண்டும்.
    -காஞ்சிப்பெரியவர்
Working...
X