பசுவை ஏன் உசத்தி வைத்திருக்கிறோம்? கோ-மாதா என்ற பெயரும் வழங்குவதுண்டு. பசு என்றால் சிறப்பு என்பதால், த்வாபர யுக முடிவில் அல்லலுற்ற பூமாதேவி தன் முறையீட்டை தெரிவிக்க இறைவனிடம் பசுவின் வடிவில் சென்றாளாம். பசு என்றால் என்ன சிறப்பு? நடைமுறை வாழ்வில் பசு என்ற பிராணி மட்டுமே பிறர்க்கு உதவும் பொருட்டு தன் செல்வத்தை செலவிடுகிறது. அதன் பால், நமக்கு பாலாய்-தயிராய்-வெண்ணையாய் நெய்யாய் உருக்கி பயன்பட உதவுகிறது.
அதன் சாணம் கூட வீணாக்கப்படாமல் உபயோகிக்கப்படுகிறது. மேலும் தன் கன்றுக்கு பாலூட்டிய பின் பிறருக்கு பால்வழங்கும் ஜீவன் பசு. இப்படி சிறந்த குணங்கள் கொண்டதால் பசுவை உயர்வில் வைத்திருக்கிறோம்.
அதன் சாணம் கூட வீணாக்கப்படாமல் உபயோகிக்கப்படுகிறது. மேலும் தன் கன்றுக்கு பாலூட்டிய பின் பிறருக்கு பால்வழங்கும் ஜீவன் பசு. இப்படி சிறந்த குணங்கள் கொண்டதால் பசுவை உயர்வில் வைத்திருக்கிறோம்.