ஞானி ஒருவர் தன் சீடர்களுடன் இறைவனை தரிசனம் செய்ய சென்றார்.வழியில் நாய் ஒன்று கல்லடிபட்டு கிடந்தது.குருவும் சீடர்களும் அதற்கு உதவி செய்யாமல் கடந்து சென்றனர்.சற்று தொலைவு சென்றதும் சீடர்களுள் ஒருவனை காணாமல் திரும்பி வந்தனர்.காணாமல் போன சீடன் அடிபட்டு கிடந்த நாய்க்கு மூலிகை மருந்து போட்டுவிட்டு தன் கையில் இருந்த அபிஷேகதிருந்த நீரை அதற்கு புகட்டிகொண்டிருந்தான்.அதனை பார்த்த மற்ற சீடர்கள் அபிஷேகத்திற்கான நீரின் புனிதம் கெட்டுவிட்டதாக சொல்லி அவனை கடிந்துகொண்டனர்.ஞானி அமைதியாக அவனை பார்த்து "இதோ பிற உயிருக்காக இறங்கும் இவன் வடிவில், நான் இறைவனை தரிசித்து விட்டேன்.இனி நாம் கோவிலுக்கு போக தேவை இல்லை" என்று சொல்லி விட்டு ஆச்சரமத்திற்கு திரும்பி நடந்தார்.......( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )