Announcement

Collapse
No announcement yet.

aathu saapadu” is critically important for spiritual progress.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aathu saapadu” is critically important for spiritual progress.

    ராஜா ஒர்த்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் பெரிய மஹான். அடிக்கடி அரண்மனைக்குப் போயி அவனுக்கு நல்ல உபதேசங்களைப் பண்ணிட்டு வருவார். அந்தமாதிரி ஒருநாள், காலம்பற போனவர், ரொம்ப நேரமா அநேக விஷயங்களைப் பேசிண்டே இருந்தாரா!…….மத்யான்னம் வந்துடுத்து. ராஜா சொன்னான் ” இங்கியே பிக்ஷை பண்ணிட்டு போகணும். ஆசார நியமத்தோட, ஒங்களுக்குன்னு தனியா சமைச்சுப் போட ஏற்பாடு பண்றேன்..”ன்னு ரொம்ப கெஞ்சினான். மறுக்க முடியாம ஒத்துண்டார்.

    நன்னா ஸம்ருத்தியா போஜனம் ஆச்சு! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணினதால அரண்மணைலேயே கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிண்டார். எங்க? ராஜாவோட ‘ரூம்’ லேயே படுத்துண்டார். படுத்துண்டு இருக்கறச்சே, அங்க ஒரு சுவர்ல தொங்கிண்டு இருந்த ஒரு முத்து ஹாரம் அவர் கண்ணுல பட்டுது. அது ரொம்ப ஒஸ்தியான முத்து! சாக்ஷாத் ராஜாவோடது!



    நல்ல வைராகியான குருவுக்கு அன்னிக்கு என்னவோ அந்த முக்தாஹாரத்தை பாத்ததும், அதை எடுத்துக்கணும்…ன்னு ஒரு எண்ணம் ரொம்ப ‘ஸ்ட்ராங்’ ஆ உண்டாச்சு! பக்கத்ல யாருமே இல்லாததால, சட்னு அதை எடுத்து வஸ்த்ரத்துக்குள்ள ஒளிச்சு வெச்சுண்டுட்டார். சாதாரண மனுஷா பண்ணினாலே, திருட்டு..ங்கறது மஹாபாவம், தப்பு! இவரோ, பெரிய மஹானா, ராஜகுருவா இருக்கப்பட்டவர், கொஞ்சங்கூட மனஸை உறுத்தாம, இப்பிடி பண்ணிப்டு, தாம்பாட்டுக்கு ஆஸ்ரமத்துக்கு போய்ட்டார்! சித்தே நாழி ஆனப்புறம், ஹாரம் திருட்டுப் போன சமாச்சாரம் அரண்மனைல தெரிஞ்சுது. ஒர்த்தரையும் விடலை. எல்லாரையும் ‘செக்’ பண்ணியாச்சு. ஆனா, வாஸ்த்தவத்ல அதுக்கு காரணமான குருவை மட்டும் யாருமே கொஞ்சங்கூட சந்தேஹப்படலை.

    ஏன்னா………..அவர் அன்னிவரைக்கும் அவ்வளவு ஸுத்தரா இருந்தவர்!

    “பழி ஓரிடம், பண்டம் ஓரிடம்”…ன்னு யார் யாரையோ பிடிச்சு, மரியாதைப்பட்டவாளை வாயால கேட்டு, ஆள் படைகளை அடிச்சு, ஒதைச்சு “enquiry “, “investigation ” அது இதுன்னு நடத்தினா! தடயம் ஒண்ணும் கெடைக்கலை. இப்டியே ஒரு நாள் முழுக்கப் போச்சு! அன்னிக்கு ராத்ரி, “குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததால” இல்லே; மத்யான்னம் பண்ணினது போறாதுன்னு, ராத்ரியும் ஏதோ கன்னா பின்னா…ன்னு எண்ணம்! அது வேணும் இது வேணும்…ங்கற ஆசைனால தூக்கமே வரலை அந்த குருவுக்கு. ஸம்ருத்தியா சாப்டுட்டு ராப்பூரா தூங்காததால, ஒரே அஜீர்ணம்! மறுநாள், முழிச்சுக்கறச்சேயே வயத்ல ‘கடமுடா’ பண்ண ஆரம்பிச்சுது. பேதி பிடிச்சுண்டது.

    அஞ்சாறு தடவை போய் போய் ரொம்ப பலஹீனமா ஆய்ட்டார்! ஒடம்பு இப்பிடி ஆயாஸப்பட்டாக்கூட பேதியானதுலேர்ந்து அவர் மனஸ்ல ஒரு தெளிர்ச்சி உண்டாச்சு. இதுக்கு மேல ‘போறதுக்கு’ ஒண்ணும் இல்லேங்கற மாதிரி ஒடம்பு கிழிஞ்ச நாரா ஓஞ்சு போன ஸ்திதில………..அவரோட வழக்கமான ஒசந்த மனஸ் அவருக்கு வந்துடுத்து! அந்த பட்டபடைக்கற வெய்யில்ல, ஒடம்பு அசதியக்கூட பாக்காம, ஓடினார் முத்து மாலையைத் தூக்கிண்டு ராஜாகிட்ட! அவன்கிட்ட சொன்னார்……

    “என்ன காரணமோ தெரியலை…….நேத்தி மத்யானத்துலேர்ந்து என் புத்தி கெட்டுப் போயி, அந்த கெட்ட ஆவேசத்ல, நான்தான் அந்த மஹா பாபத்தை பண்ணிட்டேன்! நிர்தோஷமான மிச்ச எல்லாரையும் சிக்ஷை பண்ணின பாபத்துக்கு நான் காரணமாயிட்டேன். எல்லாத்தையும் சேத்து வெச்சு, நேக்கு தண்டனை குடு!” ன்னு ரொம்ப பொலம்பினார். ராஜாவோ நம்ப மாட்டேங்கறான்! “நீங்க சொன்னது ஒரு நாளும் நடந்திருக்காது. நெஜத்திருடன் பயந்து போய் காப்பாத்தச் சொல்லி ஒங்க கால்ல விழுந்திருப்பான்…..ஒங்களோட பரம தயாள குணத்தால, நீங்களே குத்தத்தைப் பண்ணின மாதிரி சொல்றேள்…”ன்னு சொல்லிட்டான். ஆனா, குரு ரொம்ப கெஞ்சி கெஞ்சி தன்னை நம்பும்படி சொன்னார். அவனோ பாதி மனசோட, “நீங்க சொல்றது நெஜந்தான்…ன்னு ஒத்துண்டாலும், நிச்சயமா இதுக்கு ஏதோ அடிப்படைல காரணம் இருக்கணும். “circumstance ,motive பாத்துதானே sentence பண்ணனும்னு law வே இருக்கோல்லியோ?” ன்னு விஜாரிச்சான்.
    கடைசில குரு சொன்னார்… “வழக்கத்துக்கு மாறா நேத்திக்கு நான் அரண்மனைல சாப்டதால, அன்ன தோஷம் உண்டாகி, அது த்வாரா……….குண தோஷம் உண்டாகியிருக்கு. ராத்ரிகூட மனஸ் கெட்டே இருந்தது. வயறு கெட்டு “அதிஸாரம்” உண்டானதால, புத்தில தெளிவு உண்டாச்சு………அதுனால, நேத்து பக்வம் பண்ணின அன்னம் எங்கேர்ந்து வந்துதுன்னு விஜாரி” ன்னு ராஜாகிட்ட சொன்னார்.
    அன்னத்துல கார்போஹைட்ரேட், வைட்டமின் மட்டும் இல்லே! அதை சமைச்சவர், காய்கறிகளை தானமாவோ, வெலைக்கோ குடுத்தவர், அதை பயிர் பண்ணினவர்…ன்னு ஒரு மொழநீள லிஸ்ட்டுக்கு, சம்பந்தபட்டவா எல்லாரோட குணதோஷங்களும் அந்த அன்னத்ல ‘டெபாசிட்’ ஆகி சாப்டறவா உள்ளே போறது.
    ராஜா ஒடனே உக்ராண மணியக்காரன்கிட்ட முந்தின நாள் குருவுக்கு சமைச்ச அன்னம் எங்கேர்ந்து வந்துது?ன்னு விஜாரிச்சான். அவனும் விசாரணை பண்ணிட்டு சொன்னான்…….”கொஞ்சநாளைக்கு முன்னால, கடைத்தெருவுல இருக்கற மளிகைக் கடைல ரொம்ப ஒசந்ததான ஸன்ன சம்பா அரிசி மூட்டைகளை ஒரு திருடன் திருடி முதுகுல தூக்கிண்டு போறச்சே, ராஜசேவகாள்கிட்ட பிடிபட்டான். அவங்கிட்ட இருந்த மூட்டையை அரண்மனைல வெச்சிருந்தா. மளிகைக் கடைக்காரா யாருமே அரிசி மூட்டையை ‘டிமாண்ட்’ பண்ணிண்டு வராததால, அது அரசாங்கத்துக்கு சொந்தம். நேத்திக்குத்தான் குருவுக்காக, அந்த ஒசந்த அரிசியை சமைச்சோம்”. குருவுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு.
    “பாத்தியா? அதுனாலதான் ராஜாவோட அன்னம் கூடாது…ன்னு சாஸ்திரம் சொல்றது. கொஞ்சநேரம் திருடனோட முதுகுல ஒக்காந்திருந்த அரிசி மூட்டை எனக்குள்ள போய் என்னை திருட வெச்சுடுத்தே! எப்படி ஒர்த்தன் ஒடம்புல இருக்கற வ்யாதி அணுக்கள் இன்னோர்த்தன் ஒடம்புக்குள் தொத்திகறதோ……..அதே மாதிரி, கெட்ட எண்ணங்களோட பண்ற கார்யங்கள்ள, அதை பண்ணினவனோட மானஸீக அணுக்கள் ஒட்டிண்டு இருக்கும். அந்த திருடனோட திருட்டு குண பரமாணுக்கள் எனக்குள்ள போனதோட ‘ரிசல்ட்’டை பாத்தியா?” ன்னு கேட்டார்.

    அதுனாலதான் கண்ட எடத்ல கண்டவா கையால சமைச்சு சாப்டரதால நம்ம மனஸ் கெட்டுப் போக ரொம்ப ஹேதுவாயிருக்கு. ஆத்துலேயே சமைச்சாலும், அன்னதோஷம் போறதுக்குத்தான், என்ன சமைக்கறோமோ அதை பகவானுக்கு நைவேத்யம் பண்ணிட்டா, அதுல இருக்கற கொஞ்சநஞ்ச தோஷமும் போய்டும். மனஸும் கெடாது. சரீரமும் கெடாது”.
Working...
X