“லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது
This is a picture of a Shiva Lingam in Hampi.
லிங்க ரூபத்தில் சக்தியும் பீடகதியில் கிடக்கிறாள் …
மஹாபாரதத்தில் ஒரு நாள் கவுரவர்கள் சார்பாக பாண்டவர்களோடு யுத்தம் புரிகிறார் அஸ்வத்தாமன்; அவரை வெல்வது எளிதல்ல; அவரிடம் உள்ள அஸ்திரங்களில் ‘அக்னி அஸ்திரம்’ ஒன்று போதும்; மொத்த உலகத்தையே சாம்பலாக்கிவிடமுடியும்; இது பாண்டவர்களுக்கும் தெரியும்! குறிப்பாக கிருஷ்ண பரமாத்மா நன்கறிவார்.
அன்றைய யுத்தத்தில், அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை இறுதியாகப் பிரயோகித்தார்; மொத்த பாண்டவ சைதன்யமும் சாம்பலாகப்போகிறது என்றே எல்லோரும் நினைக்க, க்ருஷ்ண பரமாத்மா பதிலுக்கு ‘பாசுபதாஸ்திரத்தை’ பிரயோகிக்கும்படி அர்ஜீனனைப் பணித்தார்; சிவனாரைக் குறித்து தவமிருந்து அர்ஜீனன் பெற்றதே பாசுபதாஸ்திரம். அது, அக்னியாஸ்திரத்தை அடக்கிவிடுகிறது. அஸ்வத்தாமனிடம் திகைப்பு!
அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் ஓர் அஸ்திரம் இருக்கமுடியுமா, என்று! பின்னர், அவர் வியாசரிடம் இது தொடர்பாக கேட்க, அவர் பதில் கூறத் தொடங்கினார்:
“அஸ்வத்தாமா! நீயும் அர்ஜீனன் போன்று மிகச் சிறந்த வீரனாக இருந்தபோதிலும், அவன் ஈஸ்வரனின் லிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து,பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான். நீயோ அந்தப்பெருமானை விக்கிரக ஆராதனை புரிந்தாய். லிங்க ரூபத்தில் சக்தியும் பீடகதியில் கிடக்கிறாள்; ஸ்தூபம் நாதமாக விளங்குகிறது; எனவே, சிவபெருமான் லிங்க ரூபத்தில் வழிபாடு உடையவர்களை, வரம் பெற்றவர்களை முந்தி ஆட்கொள்கிறான். அதனாலேயே அர்ஜீனனை உனது அஸ்திரத்தால் வெல்ல முடியவில்லை”.
மஹாபாரதத்தில் கிடைக்கும் இந்தச் செய்திப்படி லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது; இதன்படி லிங்கம் என்பது மணியாகும்; மந்திரம் என்பது ‘ஓம்நமச்சிவாய’ எனும் பஞ்சாட்சரமாகும். விபூதியே மருந்தான அவுஷதமாகும்; இதையே ‘மணிமந்திர ஓளஷதம்’ என்பார்கள்; சித்த புருஷர்களும் மிக எளிதாக, மணி மந்திர ஒளஷதமாக லிங்கத்தை பஞ்சாட்சரத்தை விபூதியைக் கொண்டார்கள்.
நன்றி: சக்தி விகடனில் வெளிவரும் தொடர்: ‘சித்தம்,சிவம்,சாகசம்’ எழுதி வருபவர் இந்திரா சவுந்தரராஜன்.