Holy Hanuman Jayanthi Day. Why is Swamigal saying thus about Lord Anjaneya in மங்களாரத்தி of Vol 5 Deivathin Kural? Please read this gem to know the answer.
*****
ராமர் ஞானம் உபதேசித்தார். ஸீதை என்ன உபதேசித்தாள்? ஸீதையென்றால் யார்? ஸாக்ஷாத் தாயார். அதனால் ப்ரேமையை உபதேசித்தாள்! ராவண வதமானதும், ஸீதையிடம் ஸந்தோஷ ஸமாசாரம் தெரிவிப்பதற்காக ஆஞ்ஜநேயர் அசோக வனத்துக்குக் குதித்துக்கொண்டு வந்தார். ராக்ஷஸிகளைப் பார்த்ததும், ‘இத்தனை நாளாகத் தாயாரை என்ன பாடுபடுத்திக் கொண்டிருந்தார்கள்? இன்றைக்குத் தொலைத்துவிடலாம் அத்தனை பேரையும்’ என்று புறப்பட்டார். அப்போது ஸீதை அந்த ராக்ஷஸிகளுக்கும் தாயாராக உபதேசம் பண்ணினாள். “அப்பா, உசந்தவர்களின் லக்ஷணம் கருணைதான். லோகத்திலே தப்புப் பண்ணாதவர்கள் யார்? இவர்களைத் தொடாதே! இவர்கள் என்ன பண்ணுவார்கள்? ராஜ ஸேவகிகள் ராஜாக்ஞைப்படிதானே பண்ணணும்? அதனால் ராவணன் சொற்படி ஹிம்ஸித்தார்கள். இப்போது விபீஷணன் ராஜாவானால் அவன் சொற்படி நமஸ்காரம் பண்ணுவார்கள்” என்றாள்.
அன்றிலிருந்து ஆஞ்ஜநேய ஸ்வாமி ஒரே கருணையாக, அன்பாக ஆகிவிட்டார். அதற்காக, தப்பு நடந்தால் சும்மாயிருப்பாரென்று அர்த்தமில்லை, அத்யாவச்யத்திலே தண்டிக்கவும் தண்டிப்பார், ‘கோவிச்சுக்கவும் கோவிச்சுப்பார்’. இப்படி வெளியிலே இருந்தாலும் உள்ளே யாரானாலும் அவர்களிடம் பூர்ணமான அன்பு, ‘இவா நல்லவாளாகணுமே!’ என்ற கவலைதான் இருக்கும்.
ஆகையினால் நான் நிஜமாகவே உங்களைக் கோபித்துக் கொள்கிறேனென்றால் எனக்கு அவரைப் பற்றி லெகசர் அடிக்கவே அர்ஹதை (அருகதை) இல்லை என்று அர்த்தம். இப்படிச் சொன்னால்தான் தூண்டிவிடும் என்பதற்காகவே… ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ என்கிற மாதிரி… கொஞ்சம் ‘புஸ்’, ‘புஸ்’ என்கிறது!
கோபமே இல்லை! எங்கேயும் யாருக்கும் யாரிடமும் கோபம் வேண்டாம். சாந்தி, அன்புதான் ஸமஸ்த ப்ராணிகளிடமும் இருக்கணும். அதுதான் அவருக்குப் பிடிக்கும். ஆனால் அப்படிச் சொல்லிக் கொண்டு நல்லதெல்லாம் அழிந்து போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தால் அவர் ஸரியென்று சொல்ல மாட்டார். மனஸில் எவரிடமும் அன்பு குறையாமலே, கார்யத்தில் பண்ண வேண்டியதை முழு விழிப்போடு சுருசுரு என்று பண்ணிக் கொண்டிருந்தால்தான் ஸந்தோஷப்பட்டு எல்லா அநுக்ரஹமும் பண்ணுவார்.
முதலில் அவர்தான் இந்த அநுக்ரஹமே… நம்மைச் சுறுசுறுப்பாக்குகிற அநுக்ரஹமே… அஜாட்ய அநுக்ரஹமே பண்ணவேண்டும். அதற்கு எல்லாரும் ப்ரார்த்தனை செய்து கொள்வோம்!
மங்களம்
ஜெய் சீதாராம்