நரேந்திர மோடியின் வெற்றி - மக்கள் மன முதிர்ச்சியின் அறிகுறி
மேற்கண்டவாறு, நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் மோடி தெரிவித்திருக்கிறார்.
மோடியைப் போன்ற ஒரு முதிர்ந்த அரசியல்வாதியைப் பார்ப்பது அரிது.
தன்னை எதிர்த்து தனியாகக் கட்சி துவங்கி தன் வெற்றி கணிசமாகக் குறையக் காரணமாக
இருந்ததையும் பொருட்படுத்தாது, கேசுபாய் படேலின் இல்லத்திற்குச் சென்று,
வணங்கி ஆசி பெற்றார்.
ஜாதி, மத வெறிகளைத் தூண்டி, மக்களைப் பிரித்து அதில் ஆதாயம் பெற நினைக்கும்
அரசியல்வாதிகள் மலிந்த இந்த இந்தியத் திருநாட்டில், அவற்றை முறியடித்து,
வளர்ச்சியை, முன்னேற்றத்தை ஏற்படுத்திக்காட்டி, ஜாதி, மதங்களைக் கடந்து
மக்களின் மனங்களைக் கவர்ந்து நல்லாட்சி நடத்தும், நல்ல தலைவர்கள்
இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று இறைவனைப்
ப்ரார்த்திப்போமாக.
புதிய தலைமுறை டி.வி இணையத்தில் அடியேன் வெளியிட்டுள்ள ஒரு கருத்தையும்
இங்கே பதிவு செய்கிறேன்:
"பி.ஜெ.பி யின் வெற்றி, மக்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது" என்ற மோதியின் செய்திக்கு,
தாங்கள் பதில் அளிக்கும்போது, "கடந்த முறையைவிட ஒரு இடம் குறைவாகவும், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக நிறைய(?) இடங்கள் அளித்திருப்பதையும், முதிர்ச்சியாகக் கொள்ளலாமா"? என்ற பதில் முதிர்ச்சியானதாகத் தெரியவில்லை.
பொதுவாக, இரண்டாவது முறை ஆளும்கட்சி தேர்ந்தெடுக்கப்படுவதே மிக மிகக் கடினம். "கர்னு கர்" "இலவச வீடு", "இலவச மின்சாரம்", "இலவசக் கணிணி" என்ற வாக்குறுதிகளில் மயங்கி, 60 தொகுதிகளில் முதிர்சியற்ற மக்கள் வாக்களித்துள்ளர்ர்கள், என்பது தங்களுக்கு ஏன் புலப்படாமல் போனது?
Comment