மகா பெரியவாளை முதல் முதலாக காஞ்சியில் தரிசிக்க வந்த தம்பதிகள், அந்த பிரசாதத்தை வாங்கிகொண்டு ரயிலில் தஞ்சை போக முடிவு செய்தனர். ஸ்டேஷனில் இறங்கி டிக்கெட்டை எடுக்க பர்ஸைத் தேடியபோது, அது அங்கே இல்லை. பர்ஸ் காணாமல்போனது கூட அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. பர்ஸுக்குள் இருந்த மகானின் பிரசாதம் அல்லவா காணமல் போய்விட்டது என்கிற கவலைதான் அவர்களுக்கு.
தங்கள் ஊரான பெங்களுருக்கு போன பிறகும் இதே கவலையாக இருந்தபோது, எல்லாம் தெரிந்த மகான் அவர் கனவில் தோன்றி, "உனக்கு பிரசாதம் பத்திரமாக வந்து சேரும்", என்றார்.
அவரது அருள் வாக்கு பொய்க்குமா என்ன?
கனவில் அருளியது போலவே, மறுநாள் தபாலில் ஒரு கவர் வந்தது.
உள்ளே ஒரு கடிதம்.
"நான்தான் உங்கள் பர்ஸை திருடினேன். நீங்கள் அதில் அட்ரஸ் வைத்து இருந்தீர்கள் - பணத்தை எடுத்துக்கொண்ட நான், அதில் இருந்த பிரசாதத்தை தூக்கி எறிய மனமில்லாமல், உங்களுக்கே அனுப்பியிருக்கிறே& #2985;்.
இப்படிக்கு
தஞ்சாவூர் ஸ்டேஷன் திருடன் "
திருடனுக்கும் அப்பிரசாதத்தை திருப்பி அனுப்பத் தோன்றியது மகானின் கருணை உள்ளத்தால் தானே?
Source:sumi