Announcement

Collapse
No announcement yet.

என் கடன் பணி செய்து கிடப்பதே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • என் கடன் பணி செய்து கிடப்பதே

    அன்றென்னவோ கொஞ்ச நேரம் நாராயணன் ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளவில்லை. கையில் சங்கமோ சக்ரமோ எடுத்து செல்ல வில்லை. கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் ‘ரெஸ்ட்’

    எஜமான் தலை மறைவில் எப்போதும் கொண்டாட்டம் தானே இந்த நால்வருக்குள்ளும் ஒரு வாக்கு வாதம். இது நடைபெறும் என்று தெரிந்து தானோ, அல்லது நடக்க வேண்டும் என்று கருதி தானோ நாராயணன் அங்கில்லை.

    “நீ எப்போதும் பெருமிதத்துடன் இருப்பது, எங்களை ஒரு மாதிரி பார்ப்பது, எனக்கு ரொம்ப நாளா மனசிலே வருத்தம் தான்”” என்றான் ஆதிசேஷன் கருடனை பார்த்து.

    “பாம்பும் பருந்தும் ஜன்ம வைரிகள் என்று மக்கள் தான் கருதுவார்கள் நீயும் அப்படித்தானோ? நான் என்று பெருமிதத்துடனும் கர்வத்துடனும் உன்னிடம் பழகினேன்??. கண்ணதாசன் பாட்டை கேட்டு " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " டயலாக் எல்லாம் நமக்குள் வேண்டாம்” என்றான் கருடன்.

    "நீ சமாதானம் சொல்வதால் உண்மை மறைந்துவிடுமா??. என்னைப் பார். நான் இன்றேல்,நாராயணனுக்கு படுக்கை கிடையாது. நான் பெருமையா பீற்றிக்கொள்கிறேன்??”” என்று சொல்லாமல் சொல்லி பெருமை பட்டான் ஆதிசேஷன்.

    “ஒரே இடத்தில் படுத்து கொண்டே இத்தனை பேச்சு பேசுகிறாயே, நான் நாராயணனை நினைத்த இடமெல்லாம் நொடியில் தூக்கி செல்கிறேனே, உன்னிலும் நானே உயர்ந்தவன் என்றா கருதுகிறேன்”” என்று இடித்தான் கருடன்.
    பேச்சு வளர்ந்தது அங்கு சிரிப்பொலி கேட்டது. இருவரும் திரும்பி பார்க்க, சக்ரம் குறுக்கிட்டது,

    “நாராயணனை படுக்கும்போதும் பிரயாணத்திலும் சுமக்கும் நீங்கள் யார் பெரியவர் என்று ஏன் வறட்டு வேதாந்தம் பேசுகிறிர்கள்?? . என்னைப் பாருங்கள். நான் நாராயணனை சுமக்க வில்லை. அவன் தான் என்னை வலக்கரத்தில் சுமக்கிறான். என் சக்தி அவனுக்கு பெருமையை அளிக்கிறது. எங்கு சென்றாலும் வெற்றிகரமாய் எதிரிகளை வதம் செய்து நாராயணனின் கரத்திற்கு திரும்பும் நான் ஏதாவது என்னை பற்றி டம்பம் அடித்து கொள்கிறேனா? புரிந்துகொண்டு உங்கள் வேலையை அமைதியாக செய்யுங்கள்”” என்று அமர்த்தலாக சக்ரம் சொல்லியது. மற்ற இருவருக்கும் இந்த பேச்சில் கர்வம் தான் உள்ளது. எனவே இத்தனை நேரம் பேசாமல் இருக்கும் சங்கு கிட்டே ஞாயம் கேட்க திரும்பின”” அமைதியாக இத்தனையும் கவனித்த சங்கு பேசாமல் தலையை மட்டும் ஆட்டியது “பேசமாட்டேன்” என்றது. “நீ
    உன் அபிப்ராயம் சொல்லியே ஆகவேண்டும்” என் மூவரும் கேட்க அமைதி யாக சங்கு சொல்லியது”

    “நம் நால்வருக்கும் நாராயணனால் தான் பெருமை. என் வாயால் நான் எந்த தவறான வார்த்தையும் பேச முடியாது. ஏனெனில் என் மீது தான் ஸ்ரீமன் நாராயணன் திருவாய் மலர்ந்தருளி சப்தம் வெளிப்படுகிறது. அவன் காற்றே என் ஜீவ நாதம் எனக்கென ஒரு செயலுமில்லை. ஏன் உங்களையும் சேர்த்து தான், உலகில் அவனின்று ஓர் அணுவும் அசையாது”. உணர்ந்து உள்ளம் அமைதியுற்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருங்கள்”.

    இதெல்லாம் கவனித்துகொண்டிருந்த நாராயணன் ஒன்று மறியாதவனாய் திரும்பினான்

    Source:K S RAMAKRISHNAN
Working...
X