Announcement

Collapse
No announcement yet.

Significance of THIRUNEERU

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Significance of THIRUNEERU

    திருநீறின் மகிமைகள்

    திருஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை

    'மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே '.. என திருஞான சம்பந்தரால் திருநீறின் பெருமை விளக்கியுள்ளார்.

    திருநீறு நெற்றியில் இடும் போது இப்பதிகத்தை பாடுதல் சிறப்பு. திருக்கோவில்களில் நாம் திருநீறு வாங்கும் போது கவனிக்க வேண்டியது :

    1. திருநீறு இடது கையை கீழே வைத்து வலது கையால் வாங்கப்பட வேண்டும்

    2.அத் திருநீறு இடது கைக்கு மாற்றக் கூடாது

    3.நல்ல சுத்தமான தாளில் மாற்றிக்கொள்ளலாம்

    4. திருநீறை கீழே சிந்தக்கூடாது. அப்படி சிதறினால் அவ்விடம் சுத்தம் செய்ய வேண்டும்

    5.திருக்கோவிலில் வாங்கிய திருநீறை கொட்டிவிட்டு வரக்கூடாது .

    திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்க வேண்டியது :

    1.கிழக்கு ,வடக்கு திசைகளில் நின்றாவாறே திருநீறு இட வேண்டும்

    2.சிவ நாமங்களான "சிவ சிவ" "ஓம் நமச்சிவாய" "ஒம் சிவாய நமஹ" உச்சரித்தல் நல்லது. உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்து இடுவதும் நல்லதே.

    3. திருநீறு என்றால் ஐஸ்வர்யம் என்பது பொருள் .அப்படியெனில் ஐஸ்வர்யம் நம்முடனிருக்க திருநீறு இடுவோம்..

    4.வலது கை சுண்டுவிரல், கட்டை விரல் தவிர்த்து ஏனைய விரல்கள்களால் திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும். இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக்கொள்ளலாம்

    பயன்கள்:

    1. சிவனருள்

    2. மன அமைதி

    3. நெற்றியின் புருவ மத்தியியை வைத்து தான் ஹிப்டானிசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

    4. நம் நெற்றியில் தேவையற்ற நீர் உறிஞ்சும் சக்தி உடையது

    5. நாம் திரு நீறு இட்டு வெளியே செல்லுதல் கண் திருகஷ்டியில் இருந்து விலக்கு. மேற்கோள்:

    பெணபாற் புலவரான அவ்வையார் தன் உரையில் "நீறில்லாத நெற்றி பாழ்" என்கிறார் .

    எப்போதெல்லாம் குளிக்கிறீர்களோ அப்போதெல்லாம் இடுங்கள் .

    திருநீறு வாங்கும்போது நல்ல வெண் திருநீறு எங்கு கிடைக்குமென சிவனடியார்களை விசாரித்து வாங்குங்கள்.

    ஆன்மீகத்திற்கு சுத்தம் முக்கியம்.

    இப்படி பல முன்னோர்களால் சுட்டிக்காட்டப்பட்ட "திரு" நீறை அணிவோம் திவ்விய மான வாழ்வைப் பெறுவோம்.

    திருநீற்றுப்பதிகம் பாடி பாண்டிய மன்னரின் வெப்பு நோயை திருஞான சம்பந்தர் நீக்கியதாக வரலாறு.


    source: kavithaimathesu.blogspot

    ( This post is for sharing knowledge only , no intention to violate any copy rights)
Working...
X