GOD IS THERE MEANS HE IS THERE
உளன் எனில் உளன்
கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வி இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து கேட்கப்படுகின்ற மிக முக்கியமான கேள்வி. உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் கடவுள் இருக்கிறார். அவர்தான் அதாவது, அந்த மாபெரும் சக்திதான் இந்த உலகையும் மக்களையும் படைத்து காத்து ரட்சித்து வருகின்றது என்பதை மிகவும் திடமாக நம்புகிறார்கள். இதுதான் யதார்த்தமான நிதர்சனமான உண்மை. அவரவர்கள் தத்தமக்கான கடவுளை வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொருவருடைய சித்தாந்தமும் செயல்பாடுகளும் வேறு வேறாக இருந்தாலும்கூட ஒரு (Super power) எல்லாவற்றுக்கும் மேலான சக்தி நம்மையெல்லாம் வழி நடத்துகிறது என்று பலமாக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். இம்மாதிரியான சிக்கலான அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் மிக அழகான அறிவுப்பூர்வமான பதிலை தன்னுடைய நாலாயிர திவ்ய பிரபந்தப் பாசுரத்தின் மூலம் நமக்கு தருகிறார், ஆழ்வார்களின் தலை மகனாக கருதப்படுகிற நம்மாழ்வார்.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே
இந்த திருவாய்மொழிப் பாசுரத்தின் திரண்ட கருத்துதான் என்ன தெரியுமா?
‘கடவுள் உண்டு’ என்றும், இல்லை என்றும் ஆஸ்திக நாஸ்திக கருத்துகளை மனதில் கொண்டு ஒரு அருமையான விளக்கத்தை தருகிறார், ஆழ்வார்.
இறைவன் இருக்கிறான் என்று சொன்னால் இருக்கிறவனே ஆவான்.
அப்போது உருவத்தோடு இருக்கும் இப்பொருட்கள் எல்லாம் அவனுடைய தூல சரீரமாகும். இறைவன் இல்லை என்றாலும் இருக்கிறவனே ஆவான்.
அப்போதும் உருவம் இல்லாதனவாய் இருக்கும் இப்பொருட்கள் எல்லாம் அவனுடைய சூட்சும சரீரமாகும். ஆகையினால் இருக்கிறான் என்றும் இல்லையென்றும் சொல்லப்படுகிற இந்தத் தன்மையை தன்னுடைய குணமாக உடையவன் இறைவன்.
இத்தகைய ஈஸ்வரன் எங்கும் வியாபித்து, என்றும் எங்கும் உள்ளவனாகவே இருக்கிறான். ஆகவே, ‘உளன்’ என்ற சொல்லாலும் இலன் என்ற சொல்லாலும் இறைவன் இருக்கிறான் என்பதே மாபெரும் சத்தியமான உண்மையாக இருக்கிறது.
Source: dinakaran.
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights