Announcement

Collapse
No announcement yet.

KOLAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • KOLAM

    கோலம்-


    கோலம் போட சில விதிகள் உள்ளது.

    * சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.

    * வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.

    * தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.

    * கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோல மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியோட செம்மை சிவனையும் குறிக்கிறது.

    * கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். * வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது.

    * சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    * பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு.

    * ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது.

    * வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.

    * செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும்.

    * விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும்.

    * கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
    * இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது.

    * இடது கையால் கோலம் போடக்கூடாது.

    * பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.

    * கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.

    * கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.

    * ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் நல்லது.

    * ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.

    * கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.
    சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது.வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது.

    கோலத்தின் அமைப்பானது வீட்டிற்கு லஷ்மி கடாஷத்தை அளித்து துர்தேவதைகளை துரத்தும் என இந்துக்கள் நம்புகின்றனர்.

    அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எரும்புகளுக்கு அது உனவாகவும் பயன்படுகிறது.

    வெள்ளை கல்லின் மாவானது கோலம் வரைவதற்கு எளிதாக இருப்பதாலும் நல்ல நிறத்தை அளிப்பதாலும் தற்போது வெள்ளை கல்லின் மாவினை கோலத்தை வரைய பயன்பதுத்துகின்றனர்.

    கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கோலம் எளிதில் கலையாமல் இருக்க ஈரமான அரிசி மாவினால் கோலம் இடுவர்.

    கிருஷ்ன ஜெயந்தி தினத்தன்று வாசல் முதல் பூஜையறை வரை சிறு குழந்தைகளின் பாதம் போன்ற கோலம் இடுவர். இதன் மூலம் பகவான் கிருஷ்னரே வீட்டிற்கு வருவதாக இந்துக்களால் நம்பப்படுகிறது.

    கோலம் வரைவது மனிதனுக்கு ஒழுக்கத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் தந்து நமது பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் மனப்பக்குவத்தை அளிக்கிறது எனவும் நம்பப்படுகிறது.

    கோலத்தில் நிறைய வகைகள் உள்ளன.

    வட இந்தியாவில் வன்னமயமான கோலத்தை ரங்கோலி என்று அழைப்பர்.

    தென்னிந்தியாவில் புள்ளி கோலமும், நெளி கோலமும் பிரசித்திப் பெற்றது.

    கோலத்தில் இடும் புள்ளிகளானது நமது வாழ்வின் அன்றாட பிரச்சினைகளாகவும் வளைகோடுகள் வாழ்வின் நமது பயனங்களாகவும் கருதப்படுகிறது




    aanmikam.blogspot

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X