Announcement

Collapse
No announcement yet.

“தமிழ் என்றால் என்ன?”

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • “தமிழ் என்றால் என்ன?”

    தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறைகி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார்.

    கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்
    “எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
    அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு, குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார். உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம். சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் ”யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
    எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.
    அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,

    முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
    எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
    முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
    அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
    விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
    கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
    என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,
    “முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக அழகாக விளக்குகிறார்.

    மேலும் “என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

    Source: mahesh

  • #2
    Re: “தமிழ் என்றால் என்ன?”

    அன்புள்ள ஸ்ரீ பத்மநாபன் அவர்களுக்கு நமஸ்காரம்

    "தமிழ் என்றால் என்ன" என்ற தலைப்பில் கொடுத்துள்ள சிறு கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. இதில் கூறியுள்ள பெரியவர் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.
    தவிர "ழ " என்னும் எழுத்து "மலையாள" மொழியிலும் இருக்கிறது . மழா (மழை ) புழா (நதி )பழா (பழம்) இதுபோல் பல சொற்களில் "ழ" மலையாளத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. மலையாளம் என்ற பெயர் "மலை-ஈழம்" (மலை நாடு) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து மருவியது . மலையாள மொழியில் நல்ல செந்தமிழ் மற்றும் வட மொழியிலிருந்தும் உள்ள சொற்கள் உள்ளன. 15ம் நூட்ராண்டு வரை மலையாள நூல்கள் தமிழ்-சமஸ்க்ருதம் கலந்த மணிப்ரவாள பாஷையில் க்ராந்தாக்ஷரத்தில் எழுதப்பட்டன . பிறகு மலையாள மொழியின் தந்தை என அழைக்கப்படும் "துஞ்சாத்து ராமனுஜன் எழுத்தச்சன்" என்ற அறிஞரால் செம்மைப்படுத்தப்பட்டு தனி மொழியாக்கப்பட்டது .

    நலம்கோரும்
    ப்ரஹ் மண்யன்
    பெங்களுரு
    Last edited by Brahmanyan; 26-11-12, 19:16.

    Comment


    • #3
      Re: “தமிழ் என்றால் என்ன?”

      Dear Sri. Brahmanyan Sir,

      You are much elder to me, no need to put Namaskaram to me, Your wishes and Blessings are what i wish.
      Coming to your doubt, i get many mails about Kanchi periyava, and posted one such mail for the benefit of members.
      Here is the link
      http://www.periva.proboards.com/inde...ad=3000&page=1
      Regards
      Padmanabhan.J

      Comment


      • #4
        Re: “தமிழ் என்றால் என்ன?”

        தமிழ் அழஹா பெரியவாளின் விளக்கம் அழஹா அப்பப்பா வியக்க வைக்கும் விளக்கம்

        Comment


        • #5
          Re: “தமிழ் என்றால் என்ன?”

          என் மதிப்புக்குரிய ஸ்ரீ NVS அவர்களுக்கு நமஸ்காரம்,

          தங்களால் முடிந்தபோது பதில் எழுதினால் போதும் . உடல்நிலையை கவனித்துகொள்வது மிகவும் அவசியம். தவிர, தாங்கள் பல வேலைகளுக்கு இடையே இவ்வளவு அரிய இணையதளம் ஒன்றை நடத்திவருவது மிகவும் சிரமமான தொண்டு என்பதை நான் அறிவேன் . தாங்கள் கூறிய காரணங்கள் "சால்ஜாப்பு " அல்ல.

          ஒரு சிறு விளக்கம். "சால்ஜாப்பு " என்ற வார்த்தை "சவால் ஜவாப்" (கேள்வி - பதில் ) என்ற "உருது" மொழி சொல்லின் மறுவே. ஆனால் இச்சொல்லை ஏனோ "நொண்டி சாக்கு " (lame excuse ) என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறோம் .

          தங்கள் நலம்கோரும்
          ப்ரஹ்மண்யன்,
          பெங்களூரு .

          Comment


          • #6
            Re: “தமிழ் என்றால் என்ன?”

            Sri:
            Dear Brahmanyan Sir,
            It is very happy to get the explanation for the unknowingly using phrase "Saal jaapu"
            which I now understand as Question and answer.
            thank you so much.
            regs
            nvs


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            Working...
            X