Announcement

Collapse
No announcement yet.

Inter caste marriage & Bhagavad gita

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Inter caste marriage & Bhagavad gita

    *"பிராமணப் பெண்ணோ, பிள்ளையோ வேறு வர்ணத்தவரான க்ஷத்திரிய, வைசிய பிள்ளையையோ, பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி அர்ஜுனன் வாக்கு*".
    *ஶ்ரீமத் பகவத் கீதை*
    *அத்தியாயம்----1*
    *ஸ்லோகம்----40 to 44*.


    *குல நாசத்தினால் தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்கள் அழிந்து விடுகின்றன*.
    *தர்மம் அழிந்த பிறகு குலம் முழுவதிலும் அதர்மம் வெகுவாகப் பரவுகிறது*.
    *குலதர்மம் அழிந்து விட்டால் குலத்தில் உள்ள ஸ்த்ரீ---புருஷர்கள் குல மரியாதைக்கும், சமூக மரியாதைக்கும் கட்டுப்படாமல் நடத்தை கெட்டு விடுவார்கள்*.
    *அவர்களுடைய எல்லாச் செயல்களிலும் அதர்மங்கள் நிறைந்தே இருக்கும்*.
    *இதனால் பாவம் மேலும் வளர்ந்து சமுதாயம் முழுவதும் பரவி விடும்*.
    *எங்கும் பாவம் பரவி விடுவதால் சமுதாயத்தில் உள்ள ஸ்த்ரீ---புருஷர்கள் கருத்தில், எந்தக் கட்டுப்பாட்டிற்கும் மதிப்பு இருக்காது*.
    *அவற்றைப் பாதுகாப்பது இருக்கட்டும்*.
    *அவற்றை அறிவதற்குக்கூட முயற்சி செய்யமாட்டார்கள்*.
    *யாராவது எடுத்துச் சொன்னாலும் அவர்களைப் பரிகாஸம் செய்வார்கள் அல்லது வெறுப்பார்கள்*.
    *இந்த நிலையில் சமுதாய தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு ஆதாரம் புனிதமான ஸதி தர்மம்தான்*.
    *அதுவும் அழிந்து விடும்*.
    *ஸதி தர்மத்தின் பெருமையை இழந்தபிறகு, பரிசுத்தமான குடும்பத்து ஸ்த்ரீகள் வெறுக்கத்தக்க விபசார தோஷத்திற்கு ஆளாவார்கள்*.
    *பல வகுப்பினரிடமும் பழக்கம் ஏற்பட்டு விடும்*.
    *தாய்----தந்தையர் மாறுபட்ட வர்ணத்தினர் ஆவதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் குலக்கலப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்*.
    *இப்படி குலத்தில் பரம்பரையாக வந்த புனிதத் தன்மை முழுவதும் எளிதாக நாசமாகிவிடும்*.


    *வர்ணக்கலப்பு குலநாசம் செய்தவர்களையும், குலத்தையும் நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது*.
    *இவர்களுடைய முன்னோர்கள்கூட ச்ராத்தம்,தர்ப்பணம்---இவற்றை இழந்து வீழ்ச்சி அடைவார்கள்*.
    *(ச்ராத்தத்தில் பிண்டம் வைப்பதும், பித்ருக்களை உத்தேசித்து பிராமணர்களுக்கு அனனமிடுவதும்தான்"பிண்டக்ரியை"*.
    *தர்ப்பணத்தில் எள்ளும், தண்ணீரும் விடுவதுதான்" உதகக்ரியை"*.
    *இரண்டும் சேர்ந்து"பிண்டோதகக்ரியை"*.
    *அதாவது"ச்ராத்த----தர்ப்பணங்கள்)*.


    *சாஸ்திர முறை மீறப்பட்டு விட்டபடியால், அது பித்ருக்களுக்குப் போய்ச் சேருவதில்லை*.
    *இவ்வாறு சந்ததிகள் மூலம் கிடைக்க வேண்டிய பிண்டம் ஜலம் ஆகியவைக் கிடைக்காததால் முன்னோர்கள் வீழ்கிறார்கள்*.
    *குலநாசம் செய்பவர்களின் இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குறறங்களினால், தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்களும், ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன*.
    *வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை வர்ண தர்மங்கள்*.
    *அவையே ஜாதி தர்மங்கள்*.
    *எவர்களுடைய குலதர்மமும், ஜாதி தர்மமும் அழிக்கப்பட்டு விட்டனவோ, அதர்மத்தில் வீழ்ந்துவிட்ட அத்தகைய மனிதர்கள் பாவங்களின் பயனாக வெகுகாலம்" கும்பீபாகம், ரௌரவம் ஆகிய பயங்கரமான நரகங்களில் வீழ்ந்து பற்பலவிதமான யமதண்டனைகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்*.
    *ஆகவே குலநாசத்திற்குரிய செயலை ஒருபோதும் செய்யக் கூடாது*.
    ஆதாரம் :
    ஶ்ரீமத் பகவத் கீதா
    (தத்வவிவேசனீ)
    பக்கம் : 79 to 82.
    Gita Press,
    Gorakhpur publication.
Working...
X