Announcement

Collapse
No announcement yet.

Whch temple for cancer cure & other related diseases

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Whch temple for cancer cure & other related diseases

    Whch temple for cancer cure & other related diseases


    COURTESY: HTTPS://SRINIVASSHARMABLOG.WORDPRESS.COM


    ஆலயங்கள்
    June 1, 2016
    💞பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்💞


    அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.


    சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.


    எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்…


    மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ – அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் – ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் – ஓம் சிவ சிவ ஓம் மந்திரம்ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.


    சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்தபட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பலகாரணங்களால் – மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.


    இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்திஎன்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் – நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும்.
    நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை – உங்கள்நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான். இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!


    🌼மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் :


    சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தலநாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில்இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.


    🌼புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை :
    புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
    கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வவியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.


    🌼கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர் :


    கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார்பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்யஅனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.


    🌸சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:
    கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்துஅருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்துசங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளைசிறந்தது.


    🌼பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்' :
    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.


    🌼அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:
    அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களைகற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கானஅட்சரப்பியாசம் நடைபெறுகிறது.குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்துவந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்துபயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும்வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.


    🌼தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :
    முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.


    🌼தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :
    மயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும்திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமிதீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையைஉட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராதவியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ளசாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.


    🌼செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":
    கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர்தந்தை யாகம் செய்ய தேவையான பொருள்கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன்மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.


    🌼சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:
    மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும்வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை – திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.


    🌼நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்.


    🌸காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்.


    🌸கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர் .


    🌼கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "


    🌼பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள் .


    🌼ராகு தோஷம், எம, மரண பயம் நீங்கதிருநீலக்குடி எனும் தென்னலக்குடி.


    🌼மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீரதிருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் .


    🌼குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்.


    🌼விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன் .


    🌼விரைவில் திருமணம் கைகூட காசி விஸ்வநாதர் கோயில் "நவ கன்னியர் வழிபாடு" :
    நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மல்ர்கள், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர். கும்பகோண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள " மகாமக " குளக்கரையில் உள்ளது இத் திருத்தலம்.


    🌼மாங்கல்ய பலம் அருளும் பஞ்ச மங்கள சேத்ரமாம் " திருமங்கலக்குடி ":
    நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.


    இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.


    மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.


    இத் திருத்தலம், கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், சூரியனார் கோயிலின் அருகாமையில் அமைந்துள்ளது.


    🌼மாங்கல்யப் பேறு தரும் " கருவிலி கொட்டிட்டை சர்வாங்க சுந்தரி ":
    தட்ச யாகத்தின் போது, தாட்சாயினியை பிரிந்த ஈசன், இத் தலம் வந்தடைந்தான். ஈசனை மீண்டும் அடைய வேண்டி, அம்மையும் இங்கே வந்தடைந்தாள். அப்பனும், அம்மையும் இணைந்த இத் திருக்கோயில், திருமணம் கை கூடுவதற்கும், மாங்கல்ய பேறு நீடிப்பதற்க்கும் வழிபடப்படுகிறது. இது பிறப்பை அறுத்து மோட்சம் அருளும் தலமாதலால், " கருவிலி " என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், எம பயம் நீங்கும். இத் தலத்தை தரிசிப்பது, கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்த பலன் அருளும் கும்பகோணம் – பூந்தோட்டம் சாலையில், நாச்சியார் கோயில் வழியில், சுமார் 19 கி.மீ தொலைவில் கூந்தலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இத் திருத்தலம்.


    🌼திருமணம், மகப் பேறு, சுகப் பிரசவம் அருளும் " திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ":
    கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள்.
    நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள். கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது இத் திருக்கோயில்.


    🌼தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் " :
    முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.


    🌼திருமணத் தடைகள் நீக்கும் சார்ங்கபாணி கோயிலின் " கோமலவல்லி " நாச்சியார் ":


    சார்ங்கபாணி திருக்கோயிலின் நாச்சியார் " கோமலவல்லி " தனிச் சிறப்பு கொண்டவர். தாயாரின் அவதாரத் தலம் இது என்பதால், இங்கு நாச்சியாருக்கே முதல் மரியாதை. தாயாரை வழிபட்ட பின்னரே மாலவனை வணங்க வேண்டும். இத் தாயாருக்கு, தங்கள் வசதிக்கேற்ப புடவை சார்த்தி, திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் திருமணாமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மன வேறுபட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர், கருத்தொருமித்து ஒன்று சேர்வர். வழிபடும் சுமங்கலிப் பெண்களின் " மாங்கல்ய பலம் " பெருகும். தடை பட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது இத் திருத்தலம்.


    🌸திருமணத் தடை அகற்றும் " திருப்புறம்பியம் ஸ்ரீ குகாம்பிகை":


    பிரளயம் காத்த விநாயகர் வீற்றிருக்கும் திருப்புறம்பியத்தில் உள்ள " ஸ்ரீகுகாம்பிகை " சந்நதி மிகச் சிறப்பானது. குழந்தை வடிவு கொண்ட ஆறுமுகனை, தன் இடையில் தாங்கி நிற்கும் இந்த அம்பிகைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. தடை பட்டு கொண்டிருக்கும் திருமணங்கள் இனிதே நடைபெறவும், கருவுற்ற பெண்களது பிரசவம், சுகமாக அமைந்திடவும், வேண்டுவோர்க்கு அருள் புரிகிறாள் இந்த் அம்பிகை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற இத் திருத்தலம்.
    விவாகத் தடைகள் அகற்றும் " திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் ":
    "புன் நாகம்" என்ற பாம்புக்கு பெருமாள் காட்சி தந்த இத் திருத்தலம், ராகு மற்றும் சர்ப தோஷங்கள் நீக்கும் பரிகார நிவர்த்தி தலமாக விளங்குகிறது. " மண்ணிற்கு தென்பால் நின்ற திருமாலே " என்று திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற இத் தல வரதராஜ பெருமாளை வணங்கினால், திருமண தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும். வேறெங்குமில்லாத வண்ணம், இத் தலத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடையில் கிழக்குக் நோக்கி, தனது வலது காலை ஓரடி முன் வைத்து பெருமானை வணங்கும் பக்தர்களுக்கு உதவ தயாராக உள்ளது போன்று காட்சி தருகிறார் " பால ஆஞ்சநேயர் ". 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்த்லம் கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
    பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பூமாதேவி சமேத " ஆதி வராகப் பெருமாள் "


    தன் இடப் பக்க தொடையில் பூமா தேவியை கொண்டு காட்ச் தரும் " ஆதி வராகப் பெருமாள் ", பூமி சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர். ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில், நெய் விளக்கேற்றி வணங்கி, சகஸ்ரநாமம் செய்து, அன்ன தானம் அளித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். வழிபடுவோருக்கு புத்திர பாகியம் கிடைக்கும். இத் திருத்தலம், கும்பகோணத்தின் மையப் பகுதியில், சக்கரபாணி கோயிலின் அருகில் உள்ளது.


    🌼மணம் போல் மணாளன் அமைந்திட:


    கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் அருகிலுள்ள "நிறம் மாறும் லிங்க திருமேனி கொண்ட திருநல்லூர்"


    🌼திருமணத் தடைகள் அகன்றிட :


    கும்பகோணம் திருப்பனந்தாளை அடுத்து அமைந்துள்ள ஆதி குரு வீற்றிருக்கும் " திருலோகி சுந்தரேஸ்வரர் "


    🌸திருமணத் தடை நீங்கி புத்திர பாக்கியம் பெற்றிட:


    திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் தனி மணடபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் "சோமஸ்கந்தர்"


    🌼தடை படும் திருமணம் இனிதே நடைபெற :


    கும்பகோணத்தில் அமையப்பெற்ற "குரு பரிகார தலமான ஆலங்குடி – தட்சிணாமூர்த்தி "


    🌼திருமணத் தடைகள் நீங்க :
    கும்பகோணத்தில் அமைந்துள்ள " ராகு பரிகார தலமான – திரு நாகேஸ்வரம் ராகு பகவான் "


    🌼இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை " :


    சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.


    🌼செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" :
    கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.


    🌼செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
    இடரினும் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே!


    இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!


    🌼கடன், சங்கடங்கள் போக்கும் " திருபுவனம் சரபேஸ்வரர் " :
Working...
X