What is the size of jeevan?
திருமூலர் பெருமானின் ஞானநிலையில்
உயிரின் வடிவம் :
உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஓர் அதிசயமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான்.
ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறுபோடச் சொல்கிறார். இதுதான் ஆன்மாவின்
வடிவம் என்கிறார்.
""மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே''
(திருமந்திரம், சீவன், பா.2011)
100 ல 1000 ல 100,000 = 100 000 00 000 =
0. 00 000 00 0001
அதாவது, ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டுள்ளார்.
ஒரு கடுகில் 32,768 அணு என ஒரு பழந்தமிழ்ப் பாடல் அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.
""அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற - வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்''
8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் = ஒரு பஞ்சிழை
8 பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு = 2,62,144 அணுக்கள்,
8 கடுகு = ஒரு நெல்
8 நெல் = ஒரு விரல்
8 12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம் = 4,02,65,31,184 அணுக்கள்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4 கூப்பீடு = ஒரு காதம்
தற்போதைய விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென்(Hydrogen) அணுவின் சுற்றளவு. 0.000000212
ம்ம் - ஹைட்ரோஜென்
எனப் பிரித்திருக்கின்றது.
இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டுப் பார்ப்போம். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோன் (Micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.
பசு மாட்டு மயிரின் உரு அளவு =100 மைக்ரோன் -- Size of an hair - 100 Miicron -
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர் - 100 micron - 0.1 Millimeter..
இப்பொழுது திருமூலர் கூறியவாறு பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரிப்பதாக எடுத்துக்கொள்வோம்.
0.1/100=0.001 மில்லி மீட்டர் (MM) அதை ஆயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம். 0.001/1000= 0.000001 மில்லி மீட்டர். இதை நாம் (100,000) நூறாயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம்.
0.000001/100 000 = 0.00000000001 மில்லிமீட்டர் (MM) இதையே உயிரின் உருவத்தின் அளவாக இருக்கின்றது என்கிறார் திருமூலர்.
ஆகவே, திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 (MM) மில்லிமீட்டர்.
அணுவின் சுற்றளவு 0.000000 212 (MM)-
ஹைட்ரோஜென். ஆனால், திருமூலர் அதற்கும் கீழே சென்று உயிரின் அளவாக, 0.00000000001-யைக் குறிப்பிடுகின்றார்.
கடவுளின் வடிவம்:
""அணுவில்
அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே''
(திருமந்திரம் #2008)
அணுவிற்குள் அணுவாகவும் அதற்கப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து, அவ் ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லார்க்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.
உயிருக்கு கூறப்பட்ட வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார்.
100*1000*100 000 *1000=100 000 00 000 000 = 0.00 000 00 0000001
அணுவுக்குள் அணுவாக மனிதனின் உயிர் இருப்பது என்றும், அந்த உயிர் அணுக்களின் உள்ளீடாக ஆயிரத்திற்கும் மேலான அணுப்பிளப்பில் இறைவன் இருப்பதாகக் கூறுகின்றார்.
பல நூற்றாண்டுக்கு முன்மேயே அணுவைப் பிளக்கமுடியும் என்றும்,
அந்தப் பிளக்கப்படும் அணுவிற்குள் மனித உயிர் இருப்பதாகவும்,
அதை ஆயிரம் மடங்கிற்கும் மேல் பிளக்கும்போது அதில் இறைவன் இருக்கிறான் என்றும் திருமூலர் கூறியிருக்கின்றார்.