Announcement

Collapse
No announcement yet.

Next janma - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Next janma - Periyavaa

    "மறு பிறவி"
    _" மகா பொியவா அருளியது".


    இந்த சரீரம் போனால் இன்னொரு
    முறை சரீரம் வரக்கூடாது.அப்படிச்
    செய்துகொள்ள வேண்டும்.
    கட்டுப்பாடு, ஒழுங்கு, பரமகருணை,
    தபஸ்,பூஜை, யக்ஞம்,தானம் எல்லாம் அதற்குத்தான்.
    இந்த ஜன்மா முடிகிறபோது," அப்பாடா பிறவி எடுத்ததன் பலனை அடைந்துவிட்டோம், இனிப் பயமில்லாமல்
    போய் சேரலாம்"என்ற உறுதியும்,திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மாா்க்கத்தில் நாம்
    செல்ல வேண்டும்.
    காமம்(ஆசை), கோபம் என்பவை இருக்கிற வரைக்கும் உடம்பு (மறுபிறப்பும்) வந்துகொண்டேதான் இருக்கும். ஆகவே உடம்பு கூடாது என்றால் காமம், கோபம் எல்லாம் போக
    வேண்டும்.
    நாம் பண்ணுகிற பாபம்தான் உடம்புக்கு(பிறப்புக்கு) காரணம்.
    இனிமேல் பாபம் பண்ணாமல் இருந்தால்
    உடம்பு வராது.
    "பாபம் பண்ணக்கூடாது" என்ற நினைவு தினமும் இருக்கவேண்டும்.
    நம்முடைய கா்மா, ஜன்மா எல்லா
    வற்றுக்கும் காரணம் மனசின் சேஷ்டை
    தான். இந்த மனசை வைத்துக்கொண்டு
    அதனுடைய இச்சைகளைப் பூா்த்திப்
    பண்ணப் பாடுபடுவதில்தான் பாபங்கள்
    ஸம்பவிக்கின்றன.ஜன்மாக்கள் ஏற்படுகின்றன.
    மனசை நிறுத்திவிட்டால் கா்மா இல்லை, ஜன்மா இல்லை, மோஷம்தான்.
    "ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவில்
    தீா்த்துக் கொள்ளட்டும்" என்கிற மகா
    கருணையால்தான் ஈசுவரன் மறுபடி
    ஜன்மா தருகிறாா்.
Working...
X