Announcement

Collapse
No announcement yet.

Thirumangalyam - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirumangalyam - Periyavaa

    Thirumangalyam - Periyavaa


    திருமாங்கல்யம் கேட்டு வந்தவர்க்கு இரண்டு நாள் காக்க வைத்து செய்த அற்புதம்"


    ( பொருள் கேட்டு வந்தவர்க்கும், அதைத் தந்தவர்க்கும் இப்படி ஓர் ஒற்றுமை இருக்கும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே எப்படி மகாபெரியவாளுக்குத் தெரியும்? அது ஆசார்ய மகான் மட்டுமே அறிந்த அற்புதம்,அதிசயம்,ரகசியம்...)


    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாராவில் மகாபெரியவாள் முகாம் போட்டிருந்த காலகட்டம் அது. .கோடிஸ்வரர் ஒருவர் மகா சுவாமியை சந்திக்க வந்தார். பரமாசார்யாளின் திருப்பாதம் பணிந்தார்.


    தான் கொண்டு வந்திருந்த பழங்கள்,கனிகள் போன்றவற்றை சுவாமிகள் முன் வைத்தார். பிறகு, 'சுவாமி நான் ஏதாவது செய்ய வேண்டுமா!' என பவ்யமாக கேட்டார். அதாவது பொருள் உதவியோ அல்லது வேறு ஏதாவது உதவியோ,ஸ்ரீமடத்திற்கோ அல்லது யாராவது ஏழை பக்தர்களுக்கோ ஏதாவது உதவியோ செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.


    அந்த சமயத்தில் மகாபெரியவரை தரிசிக்க இரண்டு நாட்களுக்கு முன்பே அங்கே வந்திருந்த ஏழை பக்தர் ஒருவரும் இருந்தார்.பெரியவாளை தரிசிக்க வந்த போது 'சுவாமி பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கேன். இன்னும் திருமாங்கல்யத்துக்கான தங்கம் வாங்கக்கூட வழி பண்ண முடியாமல் இருக்கிறது' என்று சொன்னார்.


    அப்போது மகாபெரியவர்,"சரி நீ ரெண்டு நாள் மடத்துல தங்கி இரு"என்று சொல்லியிருந்தார். ஆனால் இரண்டு தினம் கழித்து அன்றைக்கு மூன்றாவது நாளும் தொடங்கியிருந்தது. அந்த ஏழை பக்தருக்கு மனதுக்குள் தவிப்பு .தாலியைப்பற்றி பெரியவாள் எதுவும் சொல்லவில்லையே. ஒருவேளை செல்வந்தரிடம் சொல்வாரோ என்ற எதிர்பார்ப்பில் அவரது தவிப்பு அதிகரித்தது


    ஆனால் மகா பெரியவர் அந்த கோடீஸ்வரரிடம் எதுவுமே சொல்லவில்லை."இப்போ பண்ணிட்டிருக்கிற சேவையையே செஞ்சுட்டு வா. சேவைதான் முக்கியம் அதுபோதும்" எனச் சொல்லி ஆசிர்வதித்தார் பெரியவா.


    கொஞ்சம் தயங்கிய செல்வந்தர் 'பெரியவா மன்னிக்கணும்.ஸ்ரீமடத்துலே அல்லது பெரியவா உதவி பண்ண நினைக்கற ஏழைகளுக்கோ ஏதாவது நிதி தேவைப்பட்ட கொடுக்கலாம் என்று செக்புக்கை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன் அதுதான்!" என்று இழுத்தார்.


    இந்த தேசத்துல இருக்கறவாளுக்கு சேவைதான் முதல்தேவை. அதை நீ செஞ்சுண்டு இருக்கே அதுபோதும். நீயும் உன் குடும்பமும் நல்லா இருங்கோ" என்று பண்ணி பிரசாதம் கொடுத்து அனுப்பிட்டார்.


    மாங்கல்யத்துக்கு உதவி கேட்டுக் காத்திருந்த ஏழை அந்தணருக்கு மனது அடித்துக் கொண்டது. என்ன இது தானே முன் வந்து ஒருவர் உதவத் தயாராக இருக்கும்போது வேண்டாம் என்று விரட்டுகிறாரே ஆசார்யா!" என்ற எண்ணமும் அவர் மனதுக்குள் எழுந்தது


    கொஞ்ச நேரம் ஆயிற்று. பெரியவாளை தரிசிக்க மார்வாடி ஒருவர் குடும்பத்தோடு வந்தார்.தான் மூன்று மாதம் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்ததாகச் சொன்ன அவர்,யாரோ ஒரு அன்பர் சொன்ன யோசனைப்படி கணவர் பிழைத்து எழுந்தால் காமாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் செய்து போடுவதாக அவர் மனைவி வேண்டியதாகவும் சொன்னார் .காஞ்சி மடத்தில். ஆசார்யா வந்திருப்பதை அறிந்து அவரை தரிசித்துவிட்டு தன் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்திருப்பதாகவும் சொன்னார்


    புன்னகை வதனத்துடன் அவர் சொல்வதைக் கேட்டார் மகாபெரியவா.பிறகு,"உன் மனைவி காமாட்சிக்குத்தானே திருமாங்கல்யம் செய்து தருவதாக வேண்டிக் கொண்டாள் .அந்தக் காமாட்சியின் குழந்தைபோல் ஓர் ஏழை கன்னிப் பெண் திருமாங்கல்யம் எதிர்பார்த்து இங்கே காத்திருக்கிறாள்.நீ அவளுக்கு தர நினைத்ததை இவளுக்கே தந்துவிடலாமே" என்று சொல்ல, தட்டாமல் சம்மதித்தார்கள் அந்த மார்வாடி தம்பதியர்.


    இரண்டு நாட்களாகக் காத்திருந்தும் பலன் ஏதும் இல்லை என்று விரக்தியில் இருந்த ஏழை அந்தணரை அழைத்தார் மகாபெரியவா. மார்வாடி தம்பதியர் காமாட்சியம்மனுக்கு என்று கொண்டு வந்திருந்த அந்தத் திருமாங்கல்யத்தை அவரிடமே நேரடியாக கொடுக்கச் செய்தார்


    கையில் மாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு கண்கலங்க நின்றவரிடம், அப்போதுதான் முதல்முறையாக ஆசார்யா கேட்டார். "விவாஹம் செஞ்சு வைக்கப் போறதா சொன்னியே உன்னோட பெண்,அவளோட பேர் என்ன?"


    "காமாட்சி!" தழுதழுத்த குரலில் அவர் சொல்ல சிலிர்த்துப் போனார்கள் மார்வாடி தம்பதியர்.


    தன் மகள் காமாட்சியின் கல்யாணத்துக்கு மாங்கல்யம் கேட்டு வந்தவருக்கு அந்தக் காமாட்சிக்காக செய்யப்பட்ட திருமாங்கல்யமே கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் காத்திருக்கச் செய்தாரோ என்ற சிலிர்ப்பு..மகிழ்ச்சி! அதைக் கொடுத்தவருக்கோ, தன் உயிரைக் காப்பாற்றிய காமாட்சியிடமே நேரடியாக
    சேர்ப்பித்த சந்தோஷம்.


    பொருள் கேட்டு வந்தவர்க்கும், அதைத் தந்தவர்க்கும் இப்படி ஓர் ஒற்றுமை இருக்கும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே எப்படி மகாபெரியவாளுக்குத் தெரியும்? அது ஆசார்ய மகான் மட்டுமே அறிந்த அற்புதம்,அதிசயம்,ரகசியம்..
Working...
X