Announcement

Collapse
No announcement yet.

Ghost,ghouls with Lord Shiva -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ghost,ghouls with Lord Shiva -Periyavaa

    Ghost,ghouls with Lord Shiva -Periyavaa
    "பாம்பு, அக்னி, அபஸ்மாரம்,பேய்,பிசாசு, பூதகணம் இதெல்லாம்எதுக்காக வேண்டி சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு
    இருக்கார்?"-ஒரு ஆசாமியைப் பார்த்து பெரியவா.


    'இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்?னு தான் புலம்பினதுக்கு பதிலையும் தான் பரமாசார்யா இப்படிமறைமுகமா சொல்றார்ங்கறது புரிஞ்சுது அந்த ஆசாமிக்கு
    கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்


    தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


    காஞ்சி மடத்துல ஒரு விசேஷ நாள்ங்கறதால கூட்டம்நிறையவே இருந்தது ஒரு நாள்.மடத்து சிப்பந்திகள்நாலஞ்சுபேர் ஆங்காங்கே நின்னு ஒழுங்குபடுத்தி பெரியவா தரிசனத்துக்கு அனுப்பிண்டு இருந்தா.நேரமாக நேரமாக கூட்டம் அதிகரிச்சு, வரிசை நீண்டுண்டேபோனதே தவிர கொஞ்சம் கூட குறையலை.


    அந்த சமயத்துல வரிசையல ஒரு இடத்துல கொஞ்சம் நெரிசல்ஏற்பட்டதால, நான் முன்னால, நீ முன்னாலன்னு சிலர்முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டா.அதைப் பார்த்துண்டே
    இருந்த மடத்து சிப்பந்தி ஒருத்தருக்கு சுர்ருன்னு கோபம்வந்துடுத்து.


    கசமுசன்னு கூச்சல் போட்டுண்டு இருந்தவாளை
    நெருங்கி சகட்டுமேனிக்கு திட்டி, கண்டிச்சு சத்தம் போட ஆரம்பிச்சுட்டார். சட்டுன்னு அங்கே அமைதி நிலவினாலும்சிலர் மனசுக்குள்ளே கறுவ ஆரம்பிச்சா.அவாளோட ஆத்திரத்துக்கு தூபம் போடறமாதிரி சிலர் சேர்ந்துண்டா.


    "மடத்துல இருக்கிற அந்த சிப்பந்தி எப்பவுமே இப்படித்தான்சிடுசிடுன்னு விழுவார். பரமாசார்யா பக்கத்துலயே இருந்தும் கொஞ்சம் கூட பக்குவமே இல்லாம இருக்காரே. இதெல்லாம்பெரியவாளுக்கு தெரியாமலா இருக்கும்.தெரிஞ்சிருந்தா இந்த
    மாதிரி ஆசாமியெல்லாம் பக்கத்துல சேர்த்துண்டிருப்பாரா? மடத்துல இருந்தும் இப்படி மடத்தனமா நடந்துக்கறாரே! இவாளையெல்லாம் எப்படித்தான் இங்கே வைச்சுண்டிருக்காளோ!" ஆளுக்கு ஆள் பேசிக்க ஆரம்பிச்சா.


    கூட்டம் மெதுவா நகர்ந்தது.சலசலத்த நபர்கள் பெரியவாளை தரிசனம் பண்ணவேண்டிய முறை வந்தது.அந்த நபர்கள்ல முதல்ல நின்னவரைப் பார்த்தா ஆசார்யா, "நோக்கு சிவபுராணம் தெரியுமோ?" அப்படின்னு கேட்டார்.


    "ஏதோ படிச்சிருக்கேன் பெரியவா!" கைகட்டி வாய் பொத்தி பவ்யமா சொன்னார், அந்த ஆசாமி.


    "அதுல இருந்து உன்னண்டை ஒரு கேள்வி கேட்கலாமோ?"


    "பெரியவா மன்னிக்கணும்..எனக்கு புராணத்துல
    பாண்டித்தியமெல்லாம் இல்லை. ஏதோ படிச்சிருக்கேன்... அதனால்...! இழுத்தார் அவர்.


    ஒரே ஒரு சின்னக்கேள்வி பரமேஸ்வரனோட ஸ்வரூபம்எப்படி இருக்கும்னு தெரியுமோ? அதைச் சொன்னா போதும்.


    "மகேஸ்வரனோட வடிவங்கள்ல மூணு பிரிவு இருக்குன்னு புராணம் சொல்றது. ரூபம், அரூபம், ரூபா ரூபம்னு..!"


    தயங்கித் தயங்கி சொன்னவரை தடுத்தார் பெரியவா.


    அவ்வளவு டீப்பா எல்லாம் போக வேண்டாம் அவரோட ரூபத்துல என்னவெல்லாம் இருக்கும்? இதெல்லாம் நீ பார்த்த சித்திரங்களை நினைவுபடுத்திண்டு சொன்னாலே போதும்!" ..மென்மையா சொன்னார் பெரியவா.


    "சதாசிவனோட சிரசுல கங்கை இருக்கும். அவரோட ஒரு கையில அக்னி, இன்னொரு கையில மான், மற்றொண்ணுல மழு, அடுத்ததுல உடுக்கை இப்படி எல்லாம் இருக்கும்.இடையில புலித்தோலை உடுத்திண்டு இருப்பார்.


    ஒவ்வொண்ணா பட்டியல் போட்டார் அந்த ஆசாமி.


    பொறுமையா கேட்டுண்டிருந்த பெரியவா, 'அவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம் யோசிச்சுப்பாரு.." அப்படின்னார்


    ஒரு சில விநாடிகளுக்கு அப்புறம், பெரியவா,
    "சொல்ல மறந்துட்டேன்.சர்ப்பம் அவரோட சரீரத்துல பல இடங்கள்ல சுத்திண்டு இருக்கும். காலுக்குக் கீழே அபஸ்மாரத்தைப் போட்டு மிதிச்சுண்டு இருப்பார். பேய்,பிசாசு, பூதகணங்கள் எல்லாம் அவர் பக்கத்துல சுத்தி நின்னுண்டு இருக்கும்!"


    சொல்லி முடிச்சவரோட முகத்துல ஏதோ பத்து மார்க்கேள்விக்கு ஒருவரிகூட விடாம பதில் எழுதிட்டு முழு மார்க் கிடைச்சுடும்னு நினைச்சு சந்தோஷப்படற பையன் மாதிரி பரமாசார்யா கேள்விக்கு தான் ரொம்ப சரியா பதில் சொல்லிட்டோம் கறாப்புல ஒரு பூரிப்பு
    தெரிஞ்சுது.


    "ரொம்ப சரியா சொன்னே..இன்னொரு கேள்வி பாக்கியிருக்கு அதுக்கும் பதிலை சொல்லிடு. நீ இப்போ சொன்னியே, பாம்பு, அக்னி, அபஸ்மாரம், பேய், பிசாசு, பூதகணம் இதெல்லாம்எதுக்காகவேண்டி சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு இருக்கார்?"


    ஆசார்யா கேட்டதும் அப்படியே திகைச்சு நின்னார் அந்த ஆசாமி.


    பொற்கிழி உனக்குத்தான்னு செண்பக பாண்டியன் சொன்னதும்பிரகாசமா மாறின தருமியோட முகம், உன் பாட்டுல பிழை இருக்குன்னு நக்கீரர் சொன்னதும் இருண்ட மாதிரி, அவரோட முகம் சட்டுன்னு மங்கித்து. அப்படியே கையைக் கட்டிண்டு இறுக்கமா நின்னார்.


    ஒரு நிமிஷம் கழிச்சு ஆசார்யாளே அதுக்கான காரணத்தை சொல்லத் தொடங்கினார்.;


    "அரவம்,அபஸ்மாரம்,அக்னி இப்படி எல்லாமே ஆபத்தானதுகள்சர்ப்பத்தை விட்டா அது சகலரையும் கடிச்சு வைச்சுடும். அக்னியைப் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாமும் பஸ்மம்தான். அபஸ்மாரம்கறது ஒரு மாதிரி மயக்கத்தைஉண்டு பண்ணி எழுந்திருக்கவிடாம செஞ்சுடும்.இன்னும் பேய், பிசாசு,பூதங்களைப்பத்தி சொல்லவே வேண்டாம். அதெல்லாம்ஸ்வதந்தரமா விட்டா எல்லோருக்குமே ஹிம்சை பண்ணிடும்.
    "அதனாலதான் அதையெல்லாம் வெளியில எங்கேயும் போகவிடாம தனக்குப் பக்கத்துலயே வைச்சுண்டு இருக்கார்


    பரமேஸ்வரன்.இத்தனையையும் தான் எங்கே போனாலும்கூடவே கூட்டிண்டு போறார். அதுகளோடதான் ஆடறார். சஞ்சாரம் பண்ணறார்.சனகாதிகள் மாதிரியான முனிவர்கள் கூட எப்பவும் அவர் கூடவே இருக்கறது இல்லை. ஆனா, துஷ்டர்களை எப்பவும்தன்கூடவே வைச்சுண்டு கண்காணிச்சுண்டே இருக்கார்
    அப்படிப்பட்டவாளை வெளியில விட்டுடாம தன்னண்டையேவைச்சுக்கறதுதான் பரமேஸ்வரனோட கிருபை புரிகிறதா?"


    பரமேஸ்வரனோட மகிமையை மட்டுமில்லாம மடத்து சிப்பந்தி ஒருத்தர் கோபப்பட்டபோது 'இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்?னு தான் புலம்பினதுக்கு பதிலையும் தான் பரமாசார்யா இப்படி மறைமுகமா சொல்றார்ங்கறது புரிஞ்சுது அந்த ஆசாமிக்கு..


    நன்றி: Varagooran Narayanan தாத்தா
Working...
X