Announcement

Collapse
No announcement yet.

What happens after death ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • What happens after death ?

    மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?
    #சனாதன_தர்மம்_சாஸ்திரம்.
    ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிறது. 10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது. 11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும். இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஷ...ரு🐝🐝


    ஒரு ஜீவன் பாவம் செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது. அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.




    எளிய முறையில் சரணாகதி விளக்கம்🔑🗝
    மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை


    மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு ஆனால்... வண்டிக்காரன் உயிரில்லாத வண்டியை....
    அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..


    எந்த இடம் செல்ல வேண்டும்..என்பதை தீர்மானித்து,


    வண்டியை செலுத்துவான்.எவ்வளவு தூரம்...
    எவ்வளவு நேரம்...எவ்வளவு பாரம்..அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!


    #அறிவிருந்தும்.. சுமப்பது தானாக இருந்தாலும்
    மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது...


    #அதுபோல.. உடம்பு என்ற ஜட வண்டியை
    ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி


    இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்....
    அவனே தீர்மானிப்பவன்.அவன் இயக்குவான்..மனிதன் இயங்குகிறான்


    👉 எவ்வளவு காலம்..எவ்வளவு நேரம்..
    👉எவ்வளவு பாரம்.. தீர்மானிப்பது இறைவனே


    இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் டிசைன்..!


    #இதுதான் 🐝🐝


    இறைவன் நமக்கு தந்திருக்கும் அசைன்மென்ட்..!
    இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..
    இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.


    இருக்கும் காலங்களில் இனியது செய்வோமே!.

  • #2
    Re: What happens after death ?

    Originally posted by soundararajan50 View Post
    மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?
    #சனாதன_தர்மம்_சாஸ்திரம்.
    ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிறது. 10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது. 11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும். இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது..
    ஸ்ரீ
    இதுபோன்ற கட்டுக் கதைகள்
    எங்கே கிடைக்கின்றன?!
    -------------------------
    ஆதாரம் இல்லாமல் அள்ளி விடுகிறவர்கள் ஏராளமாகப் பெருகிவிட்டார்கள்!
    ------------------
    முதல் இரண்டு வரிகளிலேயே முரண்பாடு உள்ளது!
    -------------------


    ‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘
    எளிய முறையில் சரணாகதி விளக்கம்����
    மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை


    மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு ஆனால்... வண்டிக்காரன் உயிரில்லாத வண்டியை....
    அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..
    ?????????????????????????????????
    இந்தக் கதை சரணாகதியை எப்படி விளக்குகிறது?
    ???????????????????????????
    இதிலிருந்து சரணாகதியைப்பற்றி என்ன தெரிந்துகொள்ள முடிகிறது?!!
    ??????????????????????????????
    தலை சுற்றுகிறது.
    ??????????????????????????


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X