Announcement

Collapse
No announcement yet.

Benefits of keeping flowers in head by ladies

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Benefits of keeping flowers in head by ladies

    பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??
    .இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!
    உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.
    ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.
    அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
    பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
    .பூக்களைச் சூடும் கால அளவு
    .முல்லைப்பூ - 18 மணி நேரம்
    அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
    தாழம்பூ - 5 நாள்கள் வரை
    ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
    மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
    செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
    சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
    மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.
    மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.


    பூக்களின் பயன்கள்:


    .ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
    மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
    .செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
    பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
    .செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
    மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
    வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
    சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
    .தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
    தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
    கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
    தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.


    .பூக்களைச் சூடும் முறை:
    .
    பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
    உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
    .மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
    அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
    .ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
    .மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்
    மனம் அமைதி பெற உதவும்.
    .மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
    .முல்லைப்பூ, வில்வப்பூவை
    குளித்த பின்பு சூடலாம்.
    உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
    .
    பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
    .
    பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
    இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
    .தலையில் பூ வைப்பது,
    மனமாற்றத்துக்கு உதவும்.
    ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
    .மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.
    பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.
    மனமாற்றத்துக்கு உதவுகிறது.
    மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
    மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
    இருந்தாலும் மற்றவர் காதில் பூ சுத்துவது
    நல்லதில்லை.
Working...
X