Announcement

Collapse
No announcement yet.

3 things famous at kanchipuram -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3 things famous at kanchipuram -Periyavaa

    காஞ்சிபுரத்தில் மூன்று 'டை'கள் ரொம்ப பிரசித்தம்".&
    மூன்று 'கோடி'கள் (- நடை,வடை,குடை!)
    (பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித்துளிகள் தெரிந்திருக்காது.பெரியவாளிடம் 'சூக்ஷ்மங்கள்' அதிகம்).
    கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-161
    தட்டச்சு-வரகூரான் நாராயணன்
    புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
    காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் (தேவராஜன்) கோயில் இருக்கிறது.
    அதை மலைக்கோயில் என்றுதான் பெரும்பாலானோர் சொல்வார்கள். 'ஹஸ்திகிரி'யில் வாசம் செய்பவர், 'ஹஸ்திகிரி நாதர்' - இப்படி ஒரு பெயர்,வரதருக்கு. வருஷத்தில், ஏறக்குறைய முந்நூறு நாள்கள் உற்சவம் நடைபெறும். அந்தக் கோயிலில் உண்மையில் அவர் ராஜாதான்.திருவிழா என்றால் அப்படி ஒரு கோலாகலம்.
    காஞ்சிபுரத்தில் மூன்று 'டை'கள் ரொம்ப பிரசித்தம். - நடை,,வடை,,குடை!


    நடை
    வரதராஜர், பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது, அந்த நடை கண்கொள்ளாக் காட்சி. பல்லக்கு,வாகனம் தூக்குபவர்களுக்கு அவ்வளவு பயிற்சி. யுத்த வீரர்கள் நடையில் மிடுக்கு இருப்பதைப் போல, பல்லக்குத் தூக்கிகள் நடையில் தெய்வீகமான அழகு,பார்த்துப் பார்த்து ரசிக்கத்தக்கதாக இருக்கும்.


    வடை
    அடுத்தது, காஞ்சிபுரம் மிளகு வடை.,காஞ்சிபுரம் இட்லி - நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து. காஞ்சிபுரம் மிளகு வடை பல நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.


    குடை
    காஞ்சிபுரத்தில்தான் கோயில்களுக்கான குடை தயாரிப்பவர்கள் பல பேர் ஆண்டாண்டுக் காலமாக இருந்து வருகிறார்கள்.குடையிலும் பல தினுசுகள் வகை. சின்னக் குடையிலிருந்து மிகப் பெரிய, மிகவும் அழகான கை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குடைகள் வரை தயாரிக்கப்படுகின்றன.தமிழ்நாட்டின் பல கோயில்களுக்கு மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் குடைகள்ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


    "கோடி'கள்"
    மூன்று 'டை'கள் போலவே மூன்று 'கோடி'கள் காஞ்சிபுரத்தில் இருக்கின்றன.காமாட்சியம்மன் கோயில் விமானத்துக்கு காமகோடி விமானம் என்று பெயர். ஏகாம்பரேஸ்வரர் விமானம், ருத்ரகோடி விமானம்; வரதராஜர் கோயில் விமானம்,புண்யகோடி விமானம்!
    இவ்வளவு நுட்பமான தகவல்களையும் கூறியவர்கள் மகா பெரியவாள்.
    பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித் துளிகள் தெரிந்திருக்காது.
    பெரியவாளிடம் 'சூக்ஷ்மங்கள்' அதிகம்
Working...
X