Announcement

Collapse
No announcement yet.

Death - Pattinataar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Death - Pattinataar

    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    *பிறப்பன இறக்கும்!, இறப்பன பிறக்கும்!!*
    நம் வாழ்க்கைப் பயணத்தில், நஷ்டத்தை தேடி தருபவை சிலவனவற்றை கூடவே வைத்திருப்போம்.
    இதில் விஞ்சி நிற்பது, நாம் எடுத்துக் கொள்ளும் ஆகாரம் ஆகும்..
    அடுத்தது, மைதுனமான புணர்ச்சியாகுதல், இதில் அதிக ஈடுபாடு எடுத்துக் கொள்ளும்போது, தேகம் சூடாகி, உடல் முழுவதும் உஷ்ணமயமாக பரவிவிடும்.
    இதை தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் போது, நரம்புகள் வழுவிழந்து தொங்கிப் போகும். கண்பார்வை மங்கிப் போகும் நிலையைப் பெறுவோம்.


    இதனால் சதா தூக்கமும், மந்த புத்தியுடனே காணப்படுவோம். இதனால் நோயை வரவேற்க நாம் காத்திருப்பது போலாகிவிடுகிறது.


    அடுத்து, பயந்து பய்ந்து சாகுதல். இது உண்மையிலே நம்மை மரணத்துக்கு அழைத்துப் போகும் செயலாகும்.


    மேலும் அச்சம், ஒரு பெரிய கொடிய நோய் என்பது எல்லோருக்கும் தெரியும். அச்சம் வரும்போது, நாடித்துடிப்பு குறையத் தொடங்கும்.


    இதனால், சோம்பேறித்தனம் உருவாகி, அறிவை மழுங்கடிக்கும். இது சிந்தனைக்கு எதிரியாகி விடுகிறது.


    கூடவே அஞ்சாமையை, மனம் நிறைத்து வைத்திருந்தோமானால், ஆயுளும் பலமாக இருக்கும். திருவடி மூளை தெளிவாக இருக்கும்.


    மரணம் இயற்கையாக இருக்க வேண்டும் என மனம் நினைத்தால் மட்டும் போதாது, அதை உணர்ந்து கோபம் வரா நிலையுடன் வாழ வேண்டும்.


    மரணத்தை யாராலும் வெல்ல முடியாததுதான். மரணத்தை நினைத்து பயமிலாது இருக்க வேண்டும்.


    இப்படித்தான் பட்டினத்தார், இல்லறத்தை வெறுத்து துறவு கோலம் பூண்டிருந்த சமயம்.


    ஒருநாள், பட்டினத்தார் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.


    அந்தத் தெருவின் ஒரு வீட்டில் ஒருவர் இறந்து போய்விட, அவரைச் சுத்தி உறவினர் அலறி அரற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.


    பட்டினத்தாரும் இல்லற வாழ்வு வாழ்ந்து, பின் துறவு பூண்டபின், ஞானியாகவல்லவா இருந்தார்.


    இதனால் பட்டினத்தார், அவர்களைப் பார்த்துச் சொன்னார்......


    பிறந்தன இறப்பாகும், இறந்தன பிறப்பாகும், செத்த பிணத்தைப் பார்த்து, சாகப் போகும் பிணங்கள் அழலாமா? என வருத்தப்பட்டுக் கூறினார்.


    மரணத்தை வெல்வார்கள் மாணிடத்தில் யாரும் இல்லை. ஆனால், சாவை வென்று, சாகா நிலையை சித்தர்கள் வென்றிருக்கிறார்கள். அவர்களால்தான் மரணத்தை வெல்லும் தன்மையைப் பெற்றிருந்தனர்.


    அதனால்தான், அந்த சித்தர்கள், நமக்குச் சில தந்திரங்களைக் கூறிச் சென்றிருக்கிறார்கள்.


    அதுதான் மேலே கூறப்பட்ட
    கவலை, பயம், ஆத்திரம், பொறாமை, பெருந்தீவனம், பெரும்புணர்ச்சி, பெருந்தூக்கம், பெரும்சோம்பல் ஆகியவை ஆகும். இவைதான் நம்மை மெல்ல மெல்லக் கொல்லும் வியாதி.


    எதிலும் அமைதி காணுதல் வேண்டும், எந்நிலையிலும் சாந்தமாக இருத்தல் வேண்டும், நான்கு மணி நேரத்துடனான நல்ல தூக்கம் கொள்ளுதல் வேண்டும்.


    இவைகளுனுடே,....... ஈசன் திருவிளையாடல்களை, நினைய வேனும். சைவ சித்தாந்த நூல்கள் படிக்க வேண்டும்.


    அடிக்கடி ஆலயங்களுக்குச் செல்லனும், முக்கியமா அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து தியாணம் செய்ய வேண்டும்.


    தியாணம் என்றால் எப்படி என் பயம் வேண்டாம்!, சத்தமில்லாத இடத்தில் அமர்ந்து கண்களை மூடி, மனதை ஒருநிலைப் படுத்தி, சிவ சிவ, சிவாயநம என மனம் முனுமுனுப்பு செய்க!, அப்போது ஈசனின் உருவத்தை மனதில் கட்டி இறுக்கிக் கொள்ளுங்கள். அது போதும்.


    நேரம் கிடைக்கும் போதெல்லாம், சைவ பாடம் நடக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். பெரியோர்களின் பிரசங்கம் கேளுங்கள்.


    இப்படியொழுகிவருவோர்க்கு, உயிரோடிருக்கும்போதே உடல் சவமாகாது. மனம் தெளிவு பெறும்.
Working...
X