Announcement

Collapse
No announcement yet.

Ghost

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ghost

    Ghost
    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    *நோயானவன், பேயாகி...*தினத்துக்கும் ஒரு ஆசைகளை நினைந்து கொண்டு, நேரத்துக்கும் அதை நினைத்து அசைபோட்டு அசைபோட்டு, உடலுக்கு களைப்பை செலுத்தி, பின்பு உண்டு உறங்கி கழிக்கிறோம்.
    அடி விழுந்தால் 'அம்மா' என அலறுவோம்.....
    பலி விழுந்தால் 'ஆண்டவா' என அலறுவோம்....
    இது மானிடருக்கு இருக்கும் பொதுவான குணாதிசயம்.
    நம் உடலுக்குள் ஆன்மா, காலம் பூராவும் இருக்கையில், நம் உடலை நாமே வாடகைக்கு எடுத்துக் கொள்கிறோம். வாடகையை முறையாக செலுத்தி அவதியுற்று வருகிறோம்.
    உடம்பாவது என்ன? வாடகையாவது என்ன? என யோசிக்கின்றீர்களா?.
    ஆம் இந்த உடலுக்கு அனுதினமும் காலை, மாலை, இரவு என முவ்வேளையும் உணவை ஒப்படைப்பது வாடகைக் கணக்குதானே!
    சில நேரங்களில் இந்த வாடகை செலுத்த முடியாதபடி நேரம் அமைந்து விடுவதும் உண்டு.
    ஆம், நம் உடலுக்கு ஏதாவது நோய் தொற்றிக் கொள்ளுமே, அந்த நேரத்ததில் வாடகையை சரியாக செலுத்த முடியாது சுணங்கி இருப்போம்.
    வாகணங்களுக்கு உராய்வுனால் சீர்கெடுதல் ஏற்படுமே, அதை சரி செய்தல் செய்வோமே அதுபோலதான், இந்த உடல் சீர்கேட்டை ரிப்பேர் செய்ய, அதற்குரிய இடத்திற்குச் செல்வோம்.
    ஏற்கனவே உடல்நலம் சரியில்லததால் வாடகை உணவை செலுத்தாதின் காரணமாய், நம் உடலும், நடையும் தெம்பற்று போயிருக்கும்.
    காதுகள் மக்காக இருக்கும். கண் மங்கலாக இருக்கும். நாடியும் நரம்பும் வெலவெலத்துப் போயிருக்கும். இதுதான் உடலின் நிலை.
    மருத்துவரிடம் சென்று உடல் சீர்கேட்டை சரிசெய்து, இரண்டு மூன்று தினங்களில் சரியாகி விடுவோம்.
    மீண்டும் வாடகை உணவை உடலுக்குச் செலுத்தத் துவங்கி விடுவோம்.
    சரியான நேரத்தில் ரிப்பேர் செய்த பலனால், உடல் நிலை தெம்பு பெற்றதாய் நாமிருப்போம்.
    ஆனால், உடம்புக்குள் வந்த நோயானவன் பேயாகி, பேயானவன் பூதகளரணமாகி, அவனும் நமா உள்ளுள்ளேயே வாழ்ந்து வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருப்பான்.
    இது நமக்குக் தெரிந்தோ தெரியாமலோகூட இருக்கும்.
    எப்படி பாருங்கள்!,.. நாமே கர்மம் தொலைக்க வந்த இப்பிறப்புடம்பை பெற்று, இதனால் உடலுக்கு வாடகை உணவை கப்பமாக கட்டி வருகிறோம்...., இதில் இந்த நோயானவன் வேற நோயாகி, பேயாகி, பூதமாகி ஓசியிலேயே இவ்வுடம்புக்குள் இருந்து நமக்கு வயதாகும்வரை வாழ்கிறான்.
    என்னே இது!, அநியாயம் என்று, நம் மனம் கூட நம்மிடம் குறைபடும்.
    நாம அந்தக் குறையைக் கண்டு நம்மால என்ன செய்துவிட முடியும்?!..
    உடம்புக்குள் நோயானவன் புகுந்தான் சரி!, அவன் அங்கே போனவன் சும்மாவா இருக்கிறான். அவன் வேலையை, அவன் செய்ய ஆரம்பித்து விடுகிறான்.
    உடம்புக்குள் இருக்கும் நோயானவன், அங்கே சில பேர்களிடம் ஆசை பாசைகளைக் கூறி, கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு விடுகிறான்.
    ஒரு காலத்தில் கூட்டணியை குடியாகக் கொண்டவர்கள், பலமான பாதுகாப்பு கருதி கூட்டாகவே வாழ்ந்து வாழ்ந்தனர். அவ்வளவு பலம் கூட்டணிக்கு உண்டு.
    ஆனால், இந்த மலவுடலுக்குள் கூட்டணியாக உள்ளே புகுந்தவர்கள், சும்மாவா இருக்கிறார்கள். சும்மா இருப்பதில்லை!.
    வாதம், பித்தம், கபம், வீக்கம்,
    நீங்காவிரை, அடைப்பு என்று ஏகப்பட்ட சந்ததிகளை உருவாக்கி விடுகிறார்கள்.
    நாளும் கழிகிறது, உடலும் தேய்ந்து போகிறது, இதனால் முதுமையை வாங்கிக் கொள்வோம்.
    இந்த நேரத்தில்தான் வாத பித்தத்தார்களை உருவாக்கிய நோயானவன், மீண்டும் கிளர்ச்சியை தூண்டிவிடுகிறான்.
    இந்த நீங்கா விரையத்துக்குள் நீந்தி
    மீள, காலம் நேரம் எதுமே கிடையாது. உள்ளே இருக்கும் வாதம் பித்தத்தார்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதால் நம்மால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவர்களின் தொல்லைகளை உடலோடு சுமந்து கொள்கிறோம்.
    இதற்கு தீர்வு ஒன்று இருக்கிறது. அதுவும் தன்னாலேயே கிடைக்கிறது. அதுதான் கிழட்டு வயோதிகம்.
    கிழட்டு வயதில் வாழமுடியாதவாறு, வாத பித்தத்தார்களால், இந்த உடலில் ஆன்மா இருக்கத் தகுதியற்றதாக ஆகச் செய்து விடுகிறது.
    இந்த கிழட்டுத் தன்மை, நாளடைவில், நம்மை சாவுக்கு கூட்டிச் செல்லும். ஆன்மா இந்த உடற்கூட்டிற்கு தேவையற்றதாகி ஆகிவிடும், உடலில் ஆன்மா வாழ முடியாமல் வெளியேறத் துடிக்கும்.
    உடல் சவமாகும்!
    ஆன்மா வெளியேறும்!
    வெளிவந்த ஆன்மாவுக்கு குடியிருக்க, வேறொரு புதுவீடு (புது உடல்) தேவைப்படும்.
    மீண்டும் ஒரு புது வீடு (வேறொரு உடல்).
    மீண்டும் வாடகை உணவு ஒப்பந்தம்.
    மீண்டும் நோய், பேய், பிசாசு என்று மாறி.... மாறி......
    மாறி.... மாறி சுழலனும் உழலுனும்.....சே...சே...
    அப்பப்பா!,
    இந்த சுழற்சி நமக்குத் தேவையா? நமக்கு வெறுக்கவில்லையா!'?....
    அப்போதே நம் ஐயன் வள்ளுவனுக்கு இதுபற்றி தெரிந்திருக்கிறது. ஆமாம், ஒன்றரை அடி வரிப்பாடலில் ஒன்றை கூறியிருக்கிறாரே?
    *புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு* என்று.
    நாம் வாழ்ந்ததை அவர் எழுதவில்லை. இப்படியான ஆன்மாவை மானிடம் அடைந்து வாழப்போவதை உணர்ந்து எழுதி இருக்கிறார் திருவள்ளுவ பெருந்தகை.
    நாம் வந்து இருத்திக் கொண்ட இந்த உடலுவீடு களைத்துப் போகவும், ஓவ்வு நிலை வந்து விடுகிறது.
    உடலுவீடு அழிந்துபோக, வெளியேறிய ஆன்மாவுக்கு மீண்டும் பிறப்பு ஏற்படுகிறது.
    இந்த பிறவியின் பிறப்பை அனுபவித்து வந்ததில், நாம் சிவம் சார்ந்து ஒழுகியதால், நமக்கு தீர்வு என்று ஒன்று வேண்டும் என்று நினைவு வந்தே விட்டது.
    அதுதான் மீண்டும் பிறவாமை.
    பிறவாமை வேண்டுமென்றால், அனைவரும் ஈசன் திருவடியை நோக்கி ஓட வேண்டும். அவனை நினைத்து நினைத்து அழுது உருக வேண்டும்.
    ஈசன் திருவடியில் சரணடைய வேண்டும். சரணாகதி என்று தொடர்ந்திட வேண்டும்.
    ஈசன் உருக வேண்டுமென்றால், நீங்கள் எவ்விதம் பக்தியில் உருகித் தொழ வேண்டும் என்பதை உணர்ந்து உணர்ந்து கண்ணீர் சிந்த வேண்டும்.
    அவன் திருவடியில் உங்களை சரணடையச் செய்தால், பிறவி நோயை தீர்த்து நிரந்தமாக அவன் நிழலில் இளப்பாறிக் கொள்ளலாம்.
    வெறும் வணக்கத்தோடு நின்று விடாமல், ஆலயத் தொண்டு, அடியார் உதவி, ஈசன் இருப்பிட நலன் என்று ஏதுவாகிலும் ஈடுபடுதல் வேண்டும்.
    அதில்லாமல், ஆசையிலும் பொருளிலும், வேனுமென்று உழன்றால், எத்தனை வீடுகட்டி போரடித்தாலும், சேர்த்து வைத்த அத்தனை செல்வத்திலும் உங்களுக்கு பிரியமான ஒன்றைக் கூட உங்களால் எடுத்துப் போய்விட முடியாது.
    உங்கள் உடம்போடு உறவாடிய உறவுகள் கூட, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப்பின் கூட, சவத்துடன் பயணிக்க முடியாது.
    சிவம் எங்கோ?. ஆன்மா எங்கோ????? ஆகிவிடும்.
    சவத்தை புதைத்த உறவுகளும், சிலநாள் கண்ணீருக்குப் பின் ம(றை)றந்து போகும். இது உலகியல் நியமம்.
    ஆக, நிரம்பந்தர வீடு ஒன்று வேண்டும். அது ஈசனின் திருவடி நிழலில் இருக்கிறது.
    பிறப்பெடுத்த அத்தணை ஆன்மாவுக்கும் அங்கே இடமிருக்கு. அதன் வழியைத்தான் நாம் தொடர வேண்டும்.
    ஒரு காலத்தில் சுகபோக ஆசை வாழ்வில் நீந்தியவர்தான் பட்டினத்தார். ஒரேயொரு நிகழ்வின் மூலம்
    அத்தனையும் வெறுத்தார். பொருள், சுகபோகங்களை விட்டகழ்ந்தார். ஆசாபோகங்களை தூக்கி எறிந்தார்.
    துணிமணியைக்கூட குறைத்தார். மிகுதியான ஆசை கொண்டிருந்த தன்னைத்தானே நினைத்து வெறுத்தார்.
    இதைத்தான் பட்டினத்தார்....
    *இறவாதிருக்க மருந்துண்டுகாண், அனுமார் புகழ்தில்லை அம்பலவாணர் அடிக்கும் மறவாதிரு மனமே!* என பட்டினத்தார் கூறினார்.
    நாமும் நிரந்தர வீடு வேண்டில், அவனடி அமிழ்ந்தனைந்து விடுவோம்.
    திருச்சிற்றம்பலம்.
Working...
X