Announcement

Collapse
No announcement yet.

If Guru is bad, still we have to follow his advice.... Ramakarishna Paramahamsa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • If Guru is bad, still we have to follow his advice.... Ramakarishna Paramahamsa

    ஒரு முறை பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். "ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?"
    "ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை" என்றார் பரமஹம்ஸர். "குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?" என்று கேட்டார் சீடர்.
    பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. "அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?"
    சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.
    துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.
    ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.
    தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,..
Working...
X