Announcement

Collapse
No announcement yet.

River Kaveri wife of agastya

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • River Kaveri wife of agastya

    * அகத்தியரின் மனைவியே காவிரி நதியானாள். *


    அகத்தியர், ஈசனின் கட்டளையை ஏற்று, ஒரு சமயம் தென்திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.


    அப்படிச் செல்லும் வழியில், விதர்ப்பநாடு என்ற நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.


    அந்தசமயத்தில், விதர்ப்பநாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான்.


    இதை அறிந்து கொண்ட அகத்தியர், அந்த யாகத்தில் கலந்து கொண்டார்.


    வேதபாராயணங்கள் முழங்க யாகம் நடந்து கொண்டிருந்தபோது, யாககுண்டத்தில் கணிந்தெரிந்த தீ ஜுவாலையிலிருந்து, ஒரு பெண்மணி வெளிப்பட்டாள்.


    அதே நேரத்திலேயே அப்போது அசரீரி ஒன்று தோன்றியது. அந்த அசரீரி அகத்தியரிடம்..............,


    *'அகத்தியரே!* இந்த யாகக்குண்டலத்திலிருந்து தோன்றிய இந்தப் பெண்ணானவள் உலோபமுத்திரை ஆவாள். இவளை நீர் மணந்து கொள்ளுதல் வேண்டும்' என்றன அந்த அசரீரி.


    அசரீரி கூறியதைக் கேட்டு அகத்தியர் அதிர்ந்தாலும், அடுத்த நொடியிலேயே தெளிவிற்குத் திரும்பினார்.


    தெய்வவாக்கான அசரீரியை, நாம் உதாசீனப்படுத்துதல் கூடாது என்பதை உணர்ந்த அகத்தியர், தெய்வவாக்கின்படி உலோபமுத்திரையின் அருகில் சென்று திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்டார்.


    அதற்கு உலோபமுத்திரை....,


    *மாமகாமுனிவரே!* நான் இந்த நாட்டில் பிறந்துள்ளதால், இந்த விதர்ப்ப தேசத்து மன்னனே எனக்கு தந்தையாவார்.


    ஒரு மகளின் திருமணத்தை முடிவு செய்பவர் அம்மகளைப் பெற்ற தந்தையாவார்.


    எனவே, என் திருமணச் சம்மதத்தை என் தந்தையார் விதர்ப்ப மன்னனிடம் கேட்டு நீங்கள் ஆலோசிக்க வேண்டும் என்று சொன்னதோடு,,,,,,


    எல்லாம் உணர்ந்த உயர்வைக் கொண்ட தாங்கள், என் தந்தையாரைக் கண்டு ஆலோசிக்க வேண்டுகிறேன்.


    என் தந்தைக்கு இதில் விருப்பம் உண்டு என்றால், நான் உங்களுக்கு மனைவியாக சம்மதிக்கிறேன் என்றாள்.


    அகத்தியரும் விதர்ப்ப நாட்டு மன்னனை ச் சந்தித்து ஆலோசனை ஒழுகி வினவினார்.


    மன்னனும், அகத்தியரின் விருப்பத்திற்கு சம்மதித்தார்.


    அப்போது, உலோபமுத்திரை குறிக்கிட்டு..........


    "அகத்தியரே!'...தாங்கள் மனமுடிக்க எடுத்த முடிவுக்கு என்ன காரணம்?, அதை நாங்கள் தெரிந்து கொள்ள நினைக்கிறோம் கூறுவீர்களா??.... என வினவி நின்றாள் உலோபமுத்திரை.


    சொல்கிறேன் உலோபா!"....,என் முன்னோர்கள் யாவருக்கும் ஆண் குழந்தைகள் பிறவியெடுக்கவே இல்லை.


    என் முன்னோர்கள் ஒவ்வொருவரும் இறந்தபோதெல்லாம் ஆண்குழந்தை இல்லாததினால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமலே போய்விட்டது. திதி கொடுக்கவும் முடியவில்லை.


    இதனால் என் முன்னோர்கள், திதி பெறாமல் நாதியின்றி தவிக்கிறார்கள்.


    முன்னோர்கள் நல்லோரேயாயினும், திதி பெறாத அவர்களால் சுவர்க்க வாயிலுனுள் நுழைய முடியவில்லை.


    கடைசியாக நானும் துறவியாக இருந்து விட்டதனால், என்னாலாளும் முன்னோர்கள் சுவர்க்கம் செல்வது தடையானதால், முன்னோர்களின் நிலைமை மோட்சம் பெறாது மோசமாகி இருக்கிறது.


    ஆத்மா சாந்தி பெற, வாரிசு திதி செலுத்த வேண்டும். பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நகரத்தை அடைவான். இதை நீங்களும் அறிவீர்களே!


    ஆகவே, நான் திருமணம் செய்து கொள்வதினால், குழந்தைப் பேறு வாய்க்கப்பெற்று அதன் மூலம், முன்னோர்களின் தர்ப்பண திதியை செலுத்தி, முன்னோர்களின் ஆத்மாவை மோட்சமடையச் செய்யலாமென்றுதான் நான் திருமணம் செய்ய முடிவெடுத்தேன் என்றார்.


    இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,..........


    அகத்தியரே இந்த ஒரு காரணத்திற்காகவா திருமண நினைப்பைக் கொண்டுள்ளீர்! உமக்கு என் மகளைக் கொடுப்பதற்கில்லை என்றான்.


    அதற்கு அகத்தியரின் பணிவுவபசாரணைகள் மன்னனின் மனதை மாற்றியது.


    சரி!"..,என் மகளை உமக்குக் கொடுப்பதாயின் நான் கேட்கும் பொருள் அனைத்தையும் நீர் தர வேண்டும் என்றான் மன்னன்.


    மன்னா?.... இதென்ன பேச்சு!..,துறவியிடம் எப்படி செல்வ வளம் இருக்கும். இது உங்களுக்குத் தெரியாதா?..அகத்தியரின் பேச்சில் கொஞ்சம் கணல் தெறித்தது.


    அப்போது உலோபமுத்திரையும்.......... "முனிவர் பெருமானே!" ஏன்? பொருளைக் கேட்கக் கூடாது என்கிறீர்களா?...... இப்பூவுலகில் இனிய இல்லறம் செய்ய, பொன்னும் பொருளும் தேவை என்பது தங்களுக்கு தெரியாதா.. என்ன? எனவே, மனை எழுப்பவும், செல்வசுகத்துடன் வாழ்வும், இதைக் கொண்டு வந்து கொடுத்து, என்னை மணமுடித்துக் கொள்ளுங்கள்...., இவளின் சொற்கள் கடித்தமானதாக இருந்தாலும், குரல் கொஞ்சம் சாந்தமாகத்தான் இருந்தது.


    உயரக்குறைவான தனக்கு பூவுலகில், பெண் கொடுப்பார் கிடைப்பதே அரிது!, அப்படியிருக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுதல் அவசியமாகிறது என ஊகித்தார் அகத்தியர்..


    இதற்காக பலநாட்டு மன்னர்களைச் சந்தித்து யாசித்து பொருளைச் சேகரித்தார்.


    அப்பொருள்களைக் கொண்டு வந்து விதர்ப்ப மன்னனிடம் ஒப்படைத்தார்.


    திருமணம் நடைபெற்றது.


    ஆண் மகவை பெற்றெடுத்தார்கள்.


    வளரும் பருவ நேரத்தில் அம்மகனைக் கொண்டு, முன்னோர்களுக்க்கு திதி கொடுக்கச் செய்தார். இதன்பின்னர், முன்னோர்கள் சாபம் நீங்கினர்.


    அதன்பின்பு அகத்தியர் லோபாமுத்திரையைப் பார்த்து,...... *"அடங்காமல் பிரவாகம் எடுத்த நதியைப் போல் என்னை ஆட்டியெடுத்தவளே"!* உன் இசைவுக்கும் நானும் ஆடி ஓடினேனே!....


    இனி நீ அடங்கி ஆடி ஓட வேண்டும்! 'எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலக முழுமைக்கும் கிடைக்க வேண்டும்.


    இந்த உலகம் செழிக்க வேண்டுமென்றால் தண்ணீர் தேவை. தண்ணீர் பல இடங்களில் பாய்ந்தாலே உலகத்தின் எல்லாப் பகுதியும் செழிப்பாகி விடும்.


    பயிர்கள் பச்சை வண்ணமாய் ஓங்கும். இந்த வேலையைச் செய்வதற்காகத்தான் சிவபெருமான் என்னை இந்தத் தென்திசைக்கு அனுப்பினார்.


    ஆக,...உலோபா!"...நீ என் கமலண்டத்துக்குள் அடங்கி விடு!. என்று சொல்லி, உலோபா மீது தீர்த்த்தைத் தெளித்தார் அகத்தியர்.


    உலோபா, நீராக பிரவாகமெடுத்து, அகத்தியரின் கமண்டத்திலுள் இறங்கிக் அடங்கிக் கொண்டாள்.


    இதன்பிறகு, சிவபெருமான் அவர் விளையாட்டு வேளையை ஆரம்பித்தார்.


    அகத்தியர் பூசனை புரிந்து கொண்டிருந்த வேளையில், மகன் விநாயகனை அனுப்பினார் இறைவன்.


    விநாயகர் காகமாக உருவெடுத்து, கமண்டலத்தைத் புரட்டிச் சாய்ந்தார்.


    வெளியே வந்த உலோபா காவிரி நதியாய் பிரவாகமெடுத்து பாய்ந்து ஓடினாள்.


    பூசை நிறைந்து வந்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து, கமண்டலத்தைக் கையிலெடுத்தார்.


    கமண்டலம் சாய்ந்து வெளியேறிய நீர் போக, கமண்டலப் பள்ளத்திற்குள் மீதி தங்கியிருந்த நீரை, தென்திசையிலுள்ள பொதிகை மலை மீது தெளித்தார்.


    இந்நீர் பொதிகையிலிருந்து நநியாய் புறப்பட்டு, தாமிரபரணியாக பெருக்கெடுத்து ஓடினாள்.


    முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது விடுபட்டிருப்பின், அல்லது செய்யாமலிருப்பின், அந்தத் திதி தர்ப்பணத்தை தை அமாவாசை அன்று இங்கு வந்து நதியில் மூழ்கி குளித்து வழிபட, முன்னோர்களிடமிருந்து உங்களுக்கு ஆசிகள் வந்து சேரும்.
Working...
X