Announcement

Collapse
No announcement yet.

Ramar pattabhisheka Muhurta - Is it wrong? - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ramar pattabhisheka Muhurta - Is it wrong? - Periyavaa

    ராமர் பட்டாபிஷேகத்துக்கு முஹூர்த்தம் குறித்தது யார்?
    பெரியவா வடக்கே அனுக்ரஹம் செய்து வந்த கால கட்டத்தில்
    ப்ரம்மஸ்ரீ அடையபலம் ராமக்ருஷ்ண தீக்ஷிதர் சொல்லும்
    சம்பவம் பெரியவாதான் ஸ்ரீராமசந்த்ர மூர்த்தி என்பதாக
    நமக்கு அடையாளம் காண வைக்கிறது.
    அப்போது தரிசனத்துக்கு வந்திருந்த இன்னொரு பண்டிதர்
    பெரியவாளிடம் தமக்கு வெகு நாட்களாக மனதில் உறுத்தி
    வந்த ஸ்ரீராமாயணத்தில் ஒரு சந்தேகத்தை அவர் முன்
    வைத்தார்.
    சர்வக்ஞராக நடமாடும் தெய்வம் இதற்கு தக்க விளக்கம்
    அளிப்பார் என்ர நம்பிக்கையோடு!


    ''ராமாயணத்தில் ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு முதலில்
    குறித்த லக்னம் வசிஷ்டரால் குறிக்கப்பட்டது.அப்பேர்ப்பட்ட
    மஹரிஷியின் கணிப்பு ஏன் பயனற்றதாகப் போய் விட்டது?
    இதற்கான விடை எனக்குத் தெரியவில்லை; பெரியவாதான்
    சொல்லணும்''என் பவ்யமாகக் கேட்டார்.
    ப்ரம்மரிஷி கணிதம் எப்படிப் பொய்த்துப் போகும் என்பதே
    அவர் சந்தேகம்.
    இப்படி தடாலடியாக ஒரு கேள்வியை வால்மீகி முனிவரிடம்
    கேட்டிருந்தால் என்ன பதில் வரும்?


    உடனே பெரியவா திரும்ப பதில் சொன்ன விதத்திலேயே
    அதற்கான விளக்கமும் இருந்தது.


    ''உனக்கு யார் வசிஷ்டர்தான் லக்னம் குறிச்சார் என்று சொன்னது?
    ...நீ அப்படி ராமாயணத்தில் படிச்சிருக்கியா?''
    பின் பண்டிதரின் கேள்விக்கான பதில் விளக்கம் மிகத் தெளிவாக
    பெரியவா திருவாய் மலர்ந்தருளினார்.
    ''அந்த லக்னத்தைக் குறித்தது தசரத சக்ரவர்த்திதான்!''
    தனக்குத் தொடர்ந்து துர் ஸ்வப்னங்கள் வந்ததால் ராஜா
    ரொம்ப வருத்தப்பட்டார். உடனே ராஜ்ய பரிபாலனத்தை
    புத்திரனிடம் ஒப்ப்டைத்து விடலாம்னு முடிவெடுத்து
    ஜனங்களைக் கூட்டி ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துக்கு
    அபிப்ராயம் கேட்கிறது போல் வாக்கெடுப்பு நடத்தினார்.
    ஜனங்கள் ஸ்ரீராமரைத்தான் ஏத்துண்டதா சொன்னா.
    உடனே ராஜ்ய பரிபாலனத்தை ராமரிடம் கொடுத்துவிட
    தசரதர் அவசரப்பட்டார்.
    அதுக்குக் காரணம் கைகேயியை கல்யாணம்
    பண்ணிக்கும்போது கேகேய மன்னரிடம் ஒரு சத்யம்
    செய்திருந்தார். அதன்படி கைகேயிக்கு பிறக்கௌம்
    மகனுக்கு வாரிசுப் பட்டம் கட்டுவதாக. இந்த
    உத்தரவாதத்தின் பேரில்தான் தன் பெண்ணைக்
    கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்.
    ஆனால் ஜனங்கள் ஓட்டுக்கே ப்ராதான்யம்
    கொடுக்க வேண்டும்.ஆகையால் அந்த தர்மத்தை
    காப்பாற்றியாக வேண்டும். தான் கொடுத்த வாக்கைக்
    காப்பாற்ற பரதன் ஊரிலிருந்து திரும்புவதற்கு முன்
    ராம பட்டாபிஷேகம் நடத்த வேண்டும்.
    அதனாலே அவரே குறிச்ச லக்னம் தான் அது. வசிஷ்டர்
    அன்று!
    ஏல்லாமுமாகி நிர்கும் தெய்வமான பெரியவா அப்போது
    ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியே வந்து தனக்கு விளக்கம்
    கொடுத்ததாக அந்த பண்டிதர் நினைந்து
    பெரியவாளுக்கு ஸாஷ்டாங்க வந்தனம் செய்தார்!


    ஜய ஜய சங்கரா.....
Working...
X