courtesy: http://amrithavarshini.proboards.com/thread/1285
Namaskaram
I was hearing the Album of Smt M.S. Subbulakshmi Amma which was part of the Concert which took place in the United Nations way back in 1966.
I am glad to share one song from that album. I was thrilled to note that the lyrics are taken from Tamil classic Silappathikaaram.
The song narrates the leelas of Krishna and I am delighted to share this to all as the Janmashtami falls tomorrow.
The lyrics with meaning and the audio link is shared in the following link.
Wishing you all a Happy Janmashtami.
Humble Pranams
Anand Vasudevan
Dharumamigu Chennai
13th Aug 2017
வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரப்பாடல்
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே ( 1 )
பொருள்:
வடமலையாம் மேருவை மத்தாக்கி,
வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு
அன்று கடலை கடைந்தவன், இன்று யசோதையின் சிறு கயிற்றால்
கட்டப்பட்டுக் கிடக்கிறாயே, என்ன விந்தை!
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே ( 2 )
பொருள்:
அமரரும் உன்னை தொழுது பசி போக்கிக் கொள்ள,
நீயோ வெண்ணைதனை களவு செய்து உண்டாயே!.
அவ்வாறு உண்ட வாய்தனில் வெண்ணை,
கரும் துளசியாய் மாறியதென்ன மாயமோ?
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே ( 3 )
பொருள்:
அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின்
இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே!
அதே பூவுலகில் பாண்டவர்க்கு, மடல் கொடுக்கும்
தூதனாகவும் இருந்தது விந்தைதானே!
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே ( 4 )
பொருள்:
மூவுலகை இரண்டடியால் நடந்தது குறைவென்று,
நிறை செய்ய, தம்பியோடு வனம் வழி நடந்தாயே!
உன் சேவகன் அனுமன் சீர் கேளாத செவியும் செவியோ?
திருமால் உன் சீர் கேளாத செவியும் செவியோ?
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே ( 5 )
பொருள்:
பெரியவன் பலராமன், மாயவன் கண்ணன் இருவரையும்
உலகம் முழுதும் பார்க்க, திருமால் உன் திருவடியும்,
கையும், திருவாயும் வேலை செய்ய,
கரியவன் கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணோ?
மெய்மறந்து காணாத கண்ணும் கண்ணோ?
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே ( 6 )
அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும், பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே - போற்றாநா எப் பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும்;
- சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை
Lyrics and Meaning courtesy jeevagv.blogspot.in
https://www.youtube.com/watch?v=ogm5odfetE4
Unni