சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(61)*
*தெரிந்தும் தெரியாமலும் தொடர்.*
********************************************
*ஒளவையும் கயிலை சென்றார்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்வதற்கான தருணத்திலிருந்தார் சுந்தர மூர்த்தி நாயானார் அவர்கள்.
ஈசனும், சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வர *அயிராவணம்* என்ற யானையை அனுப்பி வைத்தார்.
அந்த அயிராவண யானையில் ஏறிக்கொண்டு கயிலாயம் புறப்பட்டுச் சென்றார்.
சுந்தரமூர்த்தி நாயனார் கயிலை புறப்படும் செய்தி அறிந்த அவரின் நண்பனாம் சேரமான் பெருமானும் குதிரையின் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி, அயிராவண யானையில் செல்லும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன்னதாகவே கயிலாயத்துக்கு வந்து சேர்ந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமானும் வானில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
வழியில் திருக்கோவிலூர் எனும் சிவத்தலம் தென்பட கீழே பார்த்தனர்.
திருக்கோவிலூர் சிவத்தலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை, ஒளவையார் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.
ஒளவையிடம் அவர்கள்,.............*ஒளவையே!* நாங்கள் கயிலாயம் செல்கிறோம். நீயும் வருகிறாயா? எனக் கேட்டனர்.
அதற்கு ஒளவை பெருமாட்டி......"கயிலாயம் செல்லும் மனம் யாருக்குத்தான் இருக்காது!" எனக்கும் வர பூரன ஆவல் உள்ளது! எனச் சொன்ன ஒளவை........
ஆனால்...., விநாயகரின் வழிபாட்டை முழுயாக்கிவிட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டாள் ஒளவை.
கயிலாயம் செல்லப் போகும் ஆவலில், விநாயகரின் வழிபாட்டு முறைகளை அவசர அவசரமாக கையாண்டார்.
ஒளவையின் அவசரத்தைப் புரிந்து கொண்ட விநாயகர், ஒளவைக்கு அசரீரி ஒலியாக குரல் கொடுத்தார்.
ஒளவையே வழக்கமாக நீ செய்யும் பூசையை எப்போதும் போல் செய்! அவசரகதி வேண்டாம்!, வழிபாட்டை முடித்ததும் உன்னை நான் கயிலாயத்தில் கொண்டு விடுகிறேன் என்றது அசரீரி.
விநாயகரின் செய்திக்கு மகிழ்ந்த ஒளவை, *சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட...* என்று துவங்கும் *விநாயகர் அகவல்* பாடலைப் பாடி விநாயகரை வழிபாடு செய்து முடித்தார்.
ஒளைவையின் அகவல் பாடல் முடியும் வரை கேட்டு மகிழ்ந்த விநாயகர், பின் துதிக்கையால் ஒரே தூக்கு தூக்கி திருக்கயிலாயத்தில் கொண்டு சேர்த்து விட்டார்.
ஏற்கனவே நண்பர் சேரமான் பெருமானிடம் சுந்தர மூர்த்தி நாயனார், நாட்டை நல் வழிநடத்தி ஆள்! நான் செல்கிறேன் கூறிச் சென்றார்.
தன் நண்பன் சுந்தரமூர்த்தி நாயனார் கயிலாயம்தான் செல்கிறான் என்பதை உணர்ந்து தெரிந்து கொண்ட சேரமான் பெருமான், பின் குதிரை மீதேறி அக்குதிரைக் காதில் பஞ்சாட்சரம் மந்திரம் ஓதி, வானில் விரைந்தெழுந்து சென்று , சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் முன்பாகவே சென்று கயிலாயத்தின் வாயிலில் காத்திருந்தார்.
ஆனால், சேரமான் பெருமான் கயிலாயம் வருவதற்க்கும், சுந்தரமூர்த்தி நாயனார் வருவதற்கும் முன்னதாகவே தன் துதிக்கை கொண்டு ஒளவையைத் தூக்கி கயிலாயத்தில் கொண்டு விட்டார் விநாயகர்.
அதாவது ஒளவையின் வருகைக்குப் பிறகுதான் சேரமான் பெருமாளும், பின் சுந்தரமூர்த்தி நாயனாரும் கயிலாயம் வந்தடைந்தனர்.
ஒளவையாரை, திருக்கோவிலூர் தலவிநாயகர் விஸ்வரூபம் உருக்கொண்டு எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், திருக்கோவிலூர் தலவிநாயகரை, *பெரிய யானை கணபதி* என அழைத்துப் போற்றுகின்றனர்.
இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செலுத்தி வந்த அருட்பதி இதுவாகும்.
ராஜராஜன் பிறந்த இடமும் இதுவாகும்.
ராஜராஜசோழனின் சகோதரி விளக்கொளி தொண்டு நடந்தேற நிதியுரிமை வழங்கியிருந்தார்.
கபிலர் இத்தலம் வந்து வழிபட்டிருந்தார்.
தென்பெண்ணை ஆற்றின் நடுவில் கபிலர் குகைக்கோயில் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலமிது.
இத்தலத்தில் ஈசனே பைரவ வடிவமாகிக் கொண்டு அருள்வதால், தேய்பிறை அஷ்டமி நாளின்போது வீரட்டேஸ்வரரை வழிபட தீவினை அகல்கிறது. நிம்மதி பெருகிறது.
திருச்சிற்றம்பலம்.
*மீண்டும் மற்றொரு தெரிந்தும் தெரியாமலில்.....*
முக்தி பேறு கிடைக்க வேண்டச் செய்யும் நீங்கள், அடியார்களுக்குத் தொண்டு செய்திருக்கிறீர்களா? ஆலயத்திற்கு தொண்டு செய்திருக்கிறீர்களா? அப்படியில்லையெனில் அத்தர்மமத்தையும், ஆலயத் தொண்டையும் முதலில் செய்யத் துவங்குங்கள்! ஏனெனில் *"முக்தி, தர்மத்தின் மூலதானம்".*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*