ரமணஜோதி 77
நிர்வாணம்-
கஷ்டப்பட்டு நாம் பரமனை கண்டறியும்பொழுது பரமன் என்று வேறு ஒருவன் இல்லை; நாமும் பரமனும் வேறில்லை;பரமன் எந்த விதமான மாய வலயமுமில்லாமல் நிர்வாணமாக சத்சிதானந்த ரூபமாக நிற்பான்; என்று கடந்த மடலில் நாம் பார்த்தோம். பகவான் ரமணரின் இந்த சுலோகம் சாந்தோக்யோபனிஷத்திலுள்ள 'தத்துவமசி' என்ற மஹா வாக்யத்தின் விவரணம் தான் என்றும் கூறினோம்.
அந்த மஹாவாக்கியத்திலுள்ள 'த்வம்' என்ற பதத்தை ஆராயும் பொழுது ஜாக்ரத் அவஸ்தையில் நாம் ஸ்தூல சரீரத்தை உடையவராகவும் மற்ற ஸ்தூல வஸ்துக்ககுடன் தொடர்பு ஏற்படும் பொழுது உள்வாகின்ற இன்ப-துன்பங்களுக்கு ஆளாகிறோம் என்றும் கண்டோம்.
சொப்னாவஸ்தையில் நமது ஸ்தூல சரீரம் இயங்கவில்லையென்றாலும் ,நமது அன்னமய கோசமும் ப்ராணமய கோசமும் இயங்கிகொண்டு தான் இருக்கும்.ஒலியை கேட்பதற்கான ஸ்ரோத்ரம்,ஸ்பரிசம் அறிவதற்கான தோல், உருவங்களை கண்டறிவதற்கான கண்கள், ருசி அறிவதற்கான நாவு முதலிய ரசனேந்திரியம், மணம் அல்லது கந்தம் அறிவதற்கான நாசி உள்ளடக்கிய க்ராணேந்திரியம் என்ற பஞ்சேந்திருயங்களும் அதிஷ்டிதமாயிருப்பது நமது சூக்ஷ்ம சரீரதிலுள்ள அந்தக்கரணத்தில் தான் என்றும் கண்டோம்.
அந்தக்கரணத்திற்கு நான்கு பரிமாணங்கள் உண்டு. அவை சித்தம், மனது, புத்தி, அஹங்காரம் என்றறியப்படுகிறது.
பஞ்சேந்திரியங்கள் வழியாக நாம் பெறுகின்ற ஒலி, ஸ்பரிசம்,ரூபம், சுவை, மணம் முதலிய விஷயங்களை உள்வாங்கி விகார-விசாரங்களை உள்வாக்குகின்ற அந்தக்கரண பரிமாணத்தை சித்தம் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.
கற்பனை செய்வதும் நினைவில் வைத்துக்கொள்வதுமான கிரியைகளை செய்கின்ற அந்தக்கரண பரிமாணத்தை மனம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பஞ்சேந்திரியங்கள் மூலம் கிடைக்கின்ற செய்திகளை ஆராய்ந்தும் அதன்மீது மேற்கொண்டு கற்பனை மாளிகைகள் எழுப்பியும் பழைய செய்திகளை நினைவு படுத்திக்கொண்டும் தீருமானங்கள் எடுக்கின்ற அந்தக்கரண பரிமாணத்தை புத்தி என்று கூறுகிறோம்.
'நான்; என்னுடையது, என்னால் என்கின்ற பாவங்களை உளவாக்கி நம்மை சம்சார சாகரத்தில் சிக்கி அல்லல்ப் பட வைக்கும் அந்தக்கரண பாவத்தை அஹங்காரம் என்று கூறுகிறோம்.
சித்தம் மனதின் வேறு ஒரு உருமாற்றம் தான் என்றும் அஹங்காரம் என்பது புத்தியின் வேறு ஒரு உருவம் தான் என்பதும் சிறிதே சிந்தித்தோமென்றால் விளங்கும்.
மனதும் பஞ்சேந்திரியங்களும் சேர்ந்து மனோமய கோசம் உருவாகிறது.
புத்தியும் இந்திரியங்களும் சேர்ந்தால் விக்ஞானமய கோசம் உருவாகிறது.
ஜீவாத்மாவை மூடியிருக்கின்ற மனோமய கோசமும் விக்ஞானமய கோசமும் அன்னமய கோசத்திற்கு சமானமான இரண்டு ஆவரணங்கள் தான்.
பஞ்ச ப்ராணனும் பஞ்சேந்திரியங்களும் சேர்ந்த ப்ராணமய கோசமும், பஞ்சேந்திரியங்களும் மனதும் சேர்ந்த மனோமய கோசமும், பஞ்சேந்திரியங்களும் புத்தியும் சேர்ந்த விக்ஞானமய கோசமும் சேர்ந்து சூக்ஷ்ம சரீரம் உருவாகிறது.
சொப்னாவஸ்தையில் இந்த சூக்ஷ்ம சரீரம் தான் இயக்கத்தில் உள்ளது.
மூன்றாவது அவஸ்தையான சுஷுப்தியோ ஸ்தூல சரீர லக்ஷணமான அன்னமய கோசத்திலோ,சூக்ஷ்ம சரீர லக்ஷணமான ப்ராணமயம், மனோமயம்,விக்ஞானமயம் என்கின்ற கோசங்களில் அதிஷ்டிதமாவதில்லை.
இந்த அவஸ்தையில் எந்த விதமான ஆசையோ, விகார-விசாரங்களோ இருப்பதில்லை. இந்த அவஸ்தையில் நம்முடைய ப்ரக்ஞை நிலைகொள்வது விக்னஞானமய கோசத்தையும் விட சூக்ஷ்மமான ஒரு உபாதியில். .அந்த உபாதியை ஆனந்த மய கோசம் என்று கூறுவார்கள்.
இந்த அவஸ்தையில் நமக்கு பூரண சாந்தி கிடைக்கிறது. ஸ்தூல சரீரத்திற்கும்,சூக்ஷ்ம சரீரத்திற்கும் இது அடிப்படையாக உள்ளதால் இதை காரண சரீரம் என்கிறார்கள்.
இந்த நிலையில் நமக்கு எதைப்பற்றின அறிவும் இல்லாமல் இருப்பதால் இதை 'அவித்யா சரீரம் என்றும் கூறுகிறார்கள்.
ஜீவாத்மா இந்த ஐந்து கோசங்களின் வழியாக பல செய்கைகளை நிறைவேற்றுகிற்றுகிறது. அதற்கு இந்த மூன்று சரீரங்களும் பயன்படுகின்றன.
ஜீவாத்மா அன்னமய கோசத்தின் வழியாக வெளிப்படும்பொழுது அது பூதாத்மா என்றறியப்படுகிறது.
ப்ராணமயகோசத்தில் பயணிக்கும்பொழுது ப்ராணாத்மா என்றும், மனோமய கோசத்தில் நிலைகொள்ளும் பொழுது மன ஆத்மா என்றும், விக்ஞான மய கோசத்தில் வர்த்திக்கும்பொழுது விக்ஞானாத்மா என்றும் ஆனந்த மய கோசத்தில் லயித்திருக்கும் பொழுது ஆனந்தாத்மா அல்லது ப்ராக்னஞாத்மா என்றும் அழைக்கப் படுகிறது.
ஆனால் ஜீவாத்மா இந்த பஞ்ச கோசாங்களிலிருந்து தனிப்பட்டு நிற்கிறது.
இந்த நிலையில் ஜிவாத்மா ப்ரத்யகாத்மா என்ற அறியப்படுகிறது.
இந்த நிலையை அடையும் பொழுது ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவான பிரம்மத்திற்கும் ஒரு வேற்றுமையும் இருப்பதில்லை. அங்கு ஆத்ம ஸாக்ஷாத்காரம் நிகழ்கிறது.
ப்ரத்யாகாத்மா நிரந்தரமானது,அதற்கு நாசம் இல்லை;கடோபனிஷத்தில் கீழ்க்கண்டவாறு பரமாத்மா அல்லது பரமபுருஷன் அல்லது ப்ரத்யாகாத்மா என்பதைக் குறித்து கூறப்பட்டுள்ளது.
இந்த்ரியேப்ய: பர ஹ்ரித்யா
அர்தேப்யஸ்ச பரம் மன:
மனஸஸ்து பரா புத்தி:
புத்தேராத்மா மஹான் பரா:
ஹூ: பரமவ்யக்த
மவ்யக்தாத்,புருஷ: பர:
புருஷான்ன பரம் கின்சித்
ஸா காஷ்டா ஸா பரா கதி:
க. உப. நி 3.10.1"
ஸ்ரோத்ரம்,த்வக்,சக்ஷுஸ், ரசம், க்ராணம் என்ற ஞானேந்திரியங்கள் பெறுகின்ற ஒலி ,ரூபம், ரசம், மணம்,ஸ்பரிசம் முதலிய கர்மேந்திரிய ஜனிதமான விகாரங்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன. இதிலும் மாறுபட்டதும் மேலானதும் ஆகிறது மனம் உட்கொள்ளுகின்ற விகாரங்கள்.
இதிலும் வேறானது புத்தியில் பதிகின்ற இந்த விகாரங்கள். புத்தியை விட கூர்மையானது அஹங்காரம், அஹங்காரத்தை விட மேலானது சமஷ்டி தத்துவம். இதையெல்லாம் விட மேலானது பரபிரம்மத்தின் மூல பிரகிருதி. அது விவரிக்க முடியாததும்,எல்லாவற்றிற்கும் மேலானதுமாகிறது."
இதே ததத்துவத்தை ஹிந்துக்களின் கோவில்களில் பிரத்யக்ஷ ரூபத்தில் காணலாம்.
சில கோயில்களில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. மற்று சில கோவில்களில் ஐந்தும் இன்னும் சிலவற்றில் ஏழும் பிரகாரங்கள் காணப்படுகின்றன.
இதன் பின்னால் நமது வேத உபனிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ள ஆத்ம தத்துவம் பிரகாசிக்கிறது.
முல மூர்த்தி பிரதிஷ்டை செய்ய்யப்பட்டுள்ள கர்ப்ப கிரகம் அல்லது ஸ்ரீகோவில் இதுதான் நம்முள் உள்ள ப்ரத்யகத்மா அல்லது பிரம்மம் நிலைகொள்கின்ற ஆனந்த மய கோசம்.
மூன்று பிரகாரம் மட்டுமுள்ள கோவில்களின் பிரகாரங்கள் வெளிப் பிரகாரம் இரண்டாம பிரகாரம்,,மூன்றாம் பிரகாரம் என்பவை முறையே ஸ்தூல,சூக்ஷ்ம,காரண சரீரங்களை குறிக்கிறது.
ஐந்து பிரகாரங்கள் உள்ள கோவில்கள் பஞ்ச கோசங்களை பிரதிபலிக்கின்றது.
ஏழு பிரகாரமுள்ள கோவிலின் உள் மூன்று பிராகாரங்கள் ஆனந்த மய கோசத்தின் பரிமாணங்களான ஹிரண்மய கோசம்,தஹர கோசம்,ப்ராக்ஞாகோசம் என்பவற்றை குறிக்கின்றது .மற்ற பிரகாரங்கள் மற்ற கோசங்களை குறிக்கின்றது.
அது இருக்கட்டும்.நாம் விஷயத்திற்கு வருவோம்.
மேலே விவரித்துள்ளபடி நமது ஆத்மா ஒரு அடுக்கும் முறையுமுள்ள கட்டமைப்புடன் இருக்கிறது.
இந்த கட்டமைப்பின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஜீவாத்மா ஜாக்ரத் ,சொப்னம், சுஷுப்தி என்கின்ற மூன்று அவஸ்தையிலும் இயங்குகின்றது. சுஷுப்தியில் நமக்கு சாந்தி அனுபவப் பட்டாலும் அது நிரந்தரமானதாக இல்லை. நாம் அந்த அவஸ்தையிலிருந்து விழித்து எழுகிறோம். மீண்டும் ஜாக்ரத் அவஸ்தைக்கு தள்ளப் படுகிறோம்.
எப்படி நிரந்தரமான சாந்தி பெறுவது என்பது தான் ஒவ்வொரு ஜீவாத்மாவின் இலட்சியமும். அந்த இலட்சியத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அருணாசலனின் அருள் கட்டாயம் வேண்டும். அந்த அருள் கிடைத்து விட்டால் நாம் 'தத்துவமஸி" என்பதின் பூரண அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவே என்கின்ற பரம சத்யத்தை புரின்ட்து கொள்கிறோம்..
அவித்யா நீங்கும் போது பனி விலகி சூரியன் வெளிப்படுவது போல் நமக்குள்ளிருக்கும் பிரம்மம் வெளிப்படுகிறது நாம் ஞானியாகிறோம். தன்னைப்போலவே மற்றவர்களையும் கருதுவோம். ஏனென்றால் தன்னிலிருந்து வேறுபட்ட ஒன்று இல்லை என்பதால்.. அந்த ஞானம் ஏற்பட்டு விட்டால் காம குரோத மத மாத்சரியங்கள் நம்மை விட்டு அகன்று விடும். விருப்பு வெறுப்புக்கள் இரா இன்ப துன்பங்களும் ஏற்படா.
நித்ய சாந்தி பெறுவொம். இதுவே ஆத்ம சாக்ஷாத்காரத்தின் பலன். நாம் பிராரப்த கர்ம பலன்களை அனுபவித்து தீர்க்கின்ற அதே வேளையில் சஞ்சித கர்மங்கள் மேலும் அதிகரிக்காமலும் இருக்கும்.
இந்த நிலையைத் தான் பகவான் ரமணர்
நெக்கு நெக் குருகியான் புக்கிட வுனைப்புக
நக்கனா நின்றனை யருணாசலா
என்கிறர்..
வெங்காயத்தை உரிக்கும் பொழுது கண்களில் நீற் வழியும்.அதை உண்டால் சுவையும் இருக்கும். ஆனால் உரித்து முடித்து விட்டாலோ அதன் மூல இடத்தில் ஒரு காம்பு மட்டும் தான் இருக்கும் அது போல தான் அன்னமய கோசம், மனோமய கோசம், விக்ஞான மய கோசம் போன்ற பஞ்சகோசங்களின் ஆவரணங்களை, ஆடைகளை களைவது போல் ஒன்றொன்றாக அவிழ்த்து எறிந்து விட்டு பார்த்தோமென்றால் நாம் நிர்வாணமாக இருப்போம். எந்த விதமான சஞ்சலங்களும் இல்லாமல், எந்த விதமான செயற்கையான மறையுமில்லாமல் பரபிரம்மட்துடன் ஒன்றாக இருப்பதை காண்போம்.
இதையேதான் பகவான் ரமணர் உபதேசவுந்தியாரில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன்
றன்னை யுணர்வதா முந்தீபற
தானா யொளிர்வதா லுந்தீபற
தானாயிருத்தலே தன்னை யறிதலாந்
தானிரண் டற்றதாலுந்தீபற
தன்மய நிட்டையீ துந்தீ பற.
உ.உ 25-26