Announcement

Collapse
No announcement yet.

மெய்ஞானம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மெய்ஞானம்

    மெய்ஞானம்
    பகவான் ரமணரிடம் சென்ற சில அறிஞர்கள், "உங்களால் கடவுளைக் காட்டமுடியுமா?" என்று கேட்டனர்.
    "நீ யார்?" என்ற கேள்வியை ரமணர் கேட்டார். அதாவது நான் யார்? நான் என்பது என்ன? நான் என்றால் என்ன? என்று பல பொருள்களில் விரியும் கேள்விகளைக் கேட்டார். இதற்கும் கடவுளை அறிவதற்கும் என்ன தொடர்பு என்று ஒவ்வொருவரும் தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறையாக யோசித்துப் பார்த்தனர். ஒருவருக்கும் அதற்கான விடை புலப்படவில்லை.
    ரமண மகரிஷியிடம் தங்களது குழப்பத்தை வெளிப்படுத்தினார்கள்.
    ரமணர் புன்னகைத்தவாறே கேட்டார், "உன்னையே யார் என்று தெரியாத உன்னால், கடவுள் பற்றி எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?"
    இப்படி நிறைய கேள்விகள் கேட்டார் ரமணர். கேள்விகள் அற்ற புள்ளியில் கடவுள் தெரிகிறார். அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கண்ட புள்ளியில் கடவுள் தெரிகிறார் என்பது இதன் பொருள் அல்ல.
    அனைத்துக் கேள்விகளுக்கும் அற்ற புள்ளி என்பது, அனைத்துக் கேள்விகளும் நமது அறியாமையின் விளைவுதான் என்று உணரும் புள்ளி மிக முக்கியமான புள்ளி அது. அந்தப் புள்ளியே இறைநிலை என்னும் பிரகாசமாக விரிகிறது.
    -- விகடபாரதி. ( ரமணர் வாழ்வில் ) ஆனந்த ஜோதி இணைப்பு.
    -- 'தி இந்து' நாளிதழ். வியாழன், டிசம்பர் 25, 2014.
Working...
X